ஒரு மாசம் ஓம தண்ணீர் குடிச்சா அடுத்த மாசம் உடலில் உண்டாகும் மாற்றம்

 
oamam oamam

பொதுவாக ஓமம் நீர் சுவாச பிரச்சினைகளை சரி செய்யும் .மேலும் நுரையீரலுக்கு பலம் சேர்த்து நம்மை பல தொற்று நோய்கள் அண்டாமல் பாதுகாக்கும் .வயிற்று வலி, இரப்பைக் குடல் பிரச்னைகளுக்கும் இந்த ஓம நீர் சிறந்த நிவாரணம் அளிக்கும் .

உணவு எளிதில் ஜீரணமாக உதவும் ஓமம் ...

மேலும் சளி, இருமல், காது, வாய் தொற்றை உண்டாக்கும்  கிருமிகளிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கொடுக்கும் .இந்த ஓம தண்ணீரை நாமே வீட்டிலேயே தயாரிக்கலாம் .கொஞ்சம் ஓமதத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க விடவேண்டும் .பின்னர் அதில் பின் வரும் பொருட்களை  சேர்க்க வேண்டும்

எலுமிச்சை - 1

மஞ்சள் தூள் - 1 tsp

கருப்பு உப்பு - தே.அ

தேன் - 1 tsp

இப்போது வீட்டில் தயாரித்த ஓம வாட்டர் ரெடி

இந்த  ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன.

இது தவிர, மலச்சிக்கல் நீங்கும். வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும். அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாள்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்றுஆயுர்வேதம் கூறுகிறது