வேலைக்கு நடுவே மூளை வளர்ச்சிக்கு இந்த பருப்புகளை எடுத்துக்கோங்க

 
brain

பொதுவாக நாம் ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எண்ணெய் வகை உணவு வகைகளையும் ,பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிகம் சாப்பிடுகிறோம் .இவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை ,ஆதலால் இந்த ஸ்னாக்ஸ் சாப்பிடாமல் அந்த  நேரத்தில் நட்ஸ் வகைகளை அதிகம் சாப்பிடலாம் .அதாவது காலை உணவு முடித்து ஒரு மணி நேரம் கழித்து அதாவது 11 மணி வாக்கில் 20 கிராம் அளவுக்கு நட்ஸ் சாப்பிடலாம் .அதாவது 2முந்திரி ,5 பாதாம் ,2வால் நட் ,2அத்தி பழம் ,2 பேரீச்சம் பழம் என்று 20 கிராம் அளவிற்கு சாப்பிட்டால் உடலுக்கு நன்மை செய்யும் .மேலும் இந்த நட்ஸ் சாப்பிடுவதால் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

brain

1.நட்ஸ் வகைகளான முந்திரி, வால்நட், பாதாம் போன்றவற்றில் விட்டமின் A, மக்னீசியம், செலினியம், போலட், போலிக் அமிலம், மெலட்டோனின், கோலின், ஒமேகா3 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை நமக்கு நன்மை செய்கின்றன

2.இந்த நட்ஸ் வகையில்  உள்ள ஊட்டச்சத்துக்கள்,நம்  மூளையினது வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலங்களது பாதுகாப்புக்கும் பெரிதும் உதவி நம்மை பல நோயிலிருந்து காக்கின்றன .

3.இவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுதல் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் .

4.இந்த நட்ஸ் வகைகள்  மன அழுத்தத்தைக் குறைத்து நமக்கு நண்மை செய்ய கூடியவை