மூக்கடைப்பை மூணே நிமிஷத்தில் நீக்கி ,நிம்மதியா மூச்சு விட வைக்கும் வழிகள்

 
cold

தினம் காலை எழுந்திருக்கும் போதே சளியினால் மூக்கடைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேம்பு, மிளகு, தேன் மற்றும் மஞ்சள் உட்கொள்வது மிக நல்லது.

வேப்ப இலைகளை நன்றாக பசை போல அரைத்து, சின்ன உருண்டையாக உருட்டி, அதை சிறிது தேனில் நனைத்து, தினம் காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் உண்ணக்கூடாது. வேப்பம் முழுவதுமாய் செரிக்க இந்த நேரம் தேவைப்படுகிறது. இது சருமம், உணவு என்று மட்டுமில்லாமல் எல்லா வகையான அலர்ஜிக்கும் வேலை செய்யும்.

இதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதிற்கும் தொடரலாம். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது. வேப்பம் மிக அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதன் கசப்பை நீங்கள் கொஞ்சம் தவிர்க்க விரும்பினால், இளந்தளைகளை பயன்படுத்தலாம். இல்லையென்றால், பச்சை இலைகளே போதுமானது.

இரவில் ஏற்படும் மூக்கடைப்பு - எளிய வைத்தியங்கள்


10 அல்லது 12 மிளகுகளை 2 ஸ்பூன் தேனில் இரவு முழுவதும் ஊறவைத்து (8ல் இருந்து 12 மணி நேரம்), அதை காலையில் நீங்கள் உட்கொள்ள வேண்டும். முடிந்தால் மிளகை நீங்கள் மென்று உண்ணலாம். சிறிது மஞ்சளை தேனுடன் கலந்து உண்பதும் கூட வேலை செய்யும். குறிப்பாக பால் சம்பந்தப்பட்ட எல்லா உணவு வகைகளையும் நீங்கள் தவிர்ப்பது, சளி/கோழை உருவாவதை குறைத்துவிடும்.


அறிகுறிகள்
சுவாசப்பாதை அலர்ஜி பொதுவாக மூக்கடைப்பு, சைனஸ் தலைவலி, தும்பல், இருமல் தொடங்கி வீஸிங், மூச்சு விடுதலில் சிரமம் வரை அறிகுறிகளாய் வெளிப்படும். ஒவ்வொருவரின் உடல் தன்மை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அலர்ஜி இருப்பின், தீவிரம் வேறுபடும். சிலருக்கு தோலில் தடிப்புகளும் சேர்ந்து ஏற்படலாம்.

மருத்துவம்
துளசி, ஆடாதொடை, தூதுவளை, விஷ்ணுகரந்தை போன்ற அற்புத மூலிகைகளின் குணநலன்களை உணர்ந்த நம் சித்தர்கள் மூலம் அலர்ஜி போன்ற சுவாசப்பாதை பிரச்சனைகளுக்கு, இவை அருமருந்தாய் பயன்படுவதை அறிகிறோம்.

இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனால் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். ஆகவே மூக்கடைப்பு ஏற்படும் போது உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.


 அதிலும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். சரி, இப்போது மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.

*  ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* கைக்குட்டையில் 2-3 துணிகள் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி, அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமெனில் இந்த ஆயிலை தலையணையில் சிறிது தெளித்துக் கொள்வதும் நல்ல நிவாரணத்தைத் தரும்.

* வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியை நன்கு பிழிந்து, முகத்தின் மேல் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


* சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.