இந்த ஆண்டில் ஆஸ்பத்திரிக்கே அடியெடுத்து வைக்காமலிருக்க உதவும் ஆரோக்கிய சபதம்

 
2022

கொரானா தொற்றுநோய் நமது அன்றாட வாழ்வில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்றுநோய் நமது வேலை, வாழ்க்கை சமநிலையை மற்றும் உணவு முறைகளையும் பாதித்துள்ளது. 

வீட்டிலேயே உணவை உண்ணும் பழக்கமே நல்லது என்ற செய்தி நமக்குக் கிடைத்திருந்தாலும், அதிகப்படியான உணவு என்ற சிக்கலும் தோன்றுகிறது. "இணை நோய்" என்ற வார்த்தையும் தற்போது அதிகம் கேட்கும் வார்த்தையாகிவிட்டது. 

உடல் பருமன், சர்க்கரை நோய் (Fat, Diabetics) போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயம். 2022 ஆம் ஆண்டு நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கவேண்டும். தொற்றுநோய் குறையும், இந்த ஆண்டு நாம் சாதாரண வாழ்க்கையை நடத்த முடியும் என்று நம்புகிறோம். 

doctor


புத்தாண்டு தீர்மானம் எடுக்கும்போது, நம்மை நாமே சுயபரிசோதனை செய்துக் கொள்ள முடியும். அந்த சுயபரிசோதனையில் ஆரோக்கியம் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும்.  குறைந்தபட்சம், சில வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் 2022ல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்லலாம்.


ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்
அதிக முழு உணவுகளையும், குறைவான  பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள். வெளியில் இருந்து வாங்கும் பொருட்களில், லேபிள்களைப் படித்து, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளைச் சரிபார்க்கவும். அதோடு உணவுகளின் உற்பத்தியில் சேரும் கொழுப்புகள் பற்றியும் எச்சரிக்கையாக இருங்கள். நாம் பல்வேறு தேர்வுகள் கொண்ட சூழலில் வாழ்கிறோம், எனவே புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தரத்தை தீர்மானிக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவின் அளவிற்கும் கொடுக்க வேண்டியது முக்கியம் ஆகும்.

உடற்பயிற்சி
சூரிய ஒளியில் நடப்பது நாளின் நல்ல தொடக்கமாக இருக்கலாம், நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது. நமது மூட்டுகள் ஒழுங்காக வேலை செய்ய உடற்பயிற்சி (Exercise for health) உதவுகிறது; படிக்கட்டுகளில் ஏறுவது தசைகளை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். சைக்கிள் ஓட்டுவது மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வது  தசைகளை வலுப்படுத்த நல்ல பயிற்சிகளாகும்.


உறக்கம்
உடலுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் போவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தினசரி குறைந்தபட்சம் 7-8 மணிநேரம் நல்ல தூக்கம் ஒருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை. இரவு உறங்கச் செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாகவே, கேஜட்டுகளை தூரமாக வைத்துவிட்டால் ஆரோக்கியம் சீர்கெடாது.


நீர்சத்து
நீர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது, சர்க்கரை கலந்த பானங்கள் அல்லது சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை குடிப்பதைத் தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்யும் போது அல்லது வீட்டு வேலைகளைச் செய்யும்போது வியர்வை வடிவில் உப்புகளை இழக்க நேரிடும். ஒரு கிளாஸ் எலுமிச்சை/புதினா சுவையுடைய தண்ணீரை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிப்பது எலக்ட்ரோலைட்டுகளின் இழப்பை ஈடுசெய்ய உதவும்.

டயட்டில் இருப்பவர்கள் தங்கள் உணவை முறையாக ரசித்து சாப்பிடுவது அவசியம். உங்களுடைய தினசரி உணவை ரசித்து சாப்பிட தொடங்கி விட்டால், அதை ஒருநாள் கைவிட வேண்டும் என்ற ஆசை எல்லாம் ஏற்படாது. அப்படி செய்ய ஆசைப்படாதீர்கள். தினசரி உணவை ரசித்து சாப்பிடுங்கள், தரமான உணவுகளை சாப்பிடுங்கள். எப்போதாவது ஒருமுறை ஒரு பீட்சா, பர்கர் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக ஏங்குவது பிரச்சனையானது.


மன அழுத்தத்தை முற்றிலும் போக்க:.நம்முடைய உடலின் ஒட்டுமொத்த நிலைமையும் மனதையே சார்ந்தது. உங்கள் தினசரி வாழ்க்கையில் போட்டி அழுத்தத்தை அதிகரித்து, நம்மை இன்னும் சிறப்பாக செயல்பட உதவுகிறது. அதை சிறப்பாக நிர்வகிப்பதை நோக்கிதான் நாம் நகர வேண்டும். அழுத்தம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்வது, உங்கள் மனநிலையை அழுத்தத்தை எப்படி கையாள்வது என்று சிந்திக்க உதவும். யோகாவும் இதற்கு நல்ல மருந்தாகும்.

கனிமச்சத்து 
உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்க (immune system) நம் உடலுக்கு பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் தேவைப்படுகின்றன. வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும். வைட்டமின்கள் ஏ, பி1, பி9, பி12, வைட்டமின் சி ஆகியவற்றுக்கும் கனிமச் சத்துக்கள் தேவை.

இரும்பு, கால்சியம், ஃபோலிக் அமிலம், கோலின், குரோமியம், மெக்னீசியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் கொண்ட உணவுகள் பல்வேறு காய்கறிகள், முட்டைகள், இறைச்சிகள், மீன், பாலாடைக்கட்டி மற்றும் பருப்பு வகைகளில் காணப்படுகின்றன. 

வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். புதிதாக வாங்கிய உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிடுங்கள். நமது  சமையலறையில் சமைக்கும் உணவே ஆரோக்கியமானது!