கருப்பை கோளாறுகளை சரிசெஞ்சி ,கரு உண்டாக்கும் நெருஞ்சியை எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சிக்கோங்க

 
baby leg baby leg

 நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன் தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம். மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும்.

குழந்தை வரம் தரும் நெருஞ்சி | Medicianal benefits of Nerunchi | குழந்தை  வரம் தரும் நெருஞ்சி - Tamil Oneindia

கருப்பை நீர்க்கட்டி மற்றும் பெண்களின் கருவுறாமை பாதிப்பைப் போக்க உதவுகிறது :

 

பெண்கள் கருவுறாமைக்கு முக்கிய காரணம்  பிசிஓஎஸ் என்னும் கருப்பை நீர்கட்டிகள். இந்த பாதிப்பு, உடலில் நீர் தேக்கம், க்ளுகோஸ்  சகிப்புத்தன்மை இன்மை போன்ற பாதிப்புகளை ஊக்குவிக்கிறது. க்ளுகோஸ் சகிப்புத்தன்மை இன்மை காரணமாக நீரிழிவு பாதிப்பு உண்டாகிறது. நெருஞ்சி , உடலில் நீர் தேக்க பாதிப்பை குறைத்து கருவுறாமை பாதிப்பைக் குறைக்கிறது . மாதவிடாய் வலியைக் குறைத்து , மெனோபாஸ்  அறிகுறிகளை எளிதாக்குகிறது.

சிறுநீரக கற்கள் :

சிறுநீரக கற்கள் பாதிப்பிற்கு சிகிச்சை அளித்து அதனை முற்றிலும்  போக்குவதற்கு நெருஞ்சி உதவுகிறது. நெருஞ்சியின் வேர்கள் மற்றும் பழங்கள் சிறுநீரக கற்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. நெருஞ்சிக்கு சிறுநீர்பிரிப்பு,  குளிர்ச்சி மற்றும் லித்தோட்ரி ப்டிக் பண்புகள் உள்ளன. அதனால் சிறுநீர்கட்டு, சிறுநீரகம் மற்றும் நீர்ப்பை சார்ந்த நீர்க்கட்டி மற்றும் வாதம் பித்தம் போன்றவற்றில் உண்டாகும் தோஷங்களைப் போக்க  உதவுகிறது.

சிறுநீர் பிரிப்பு தன்மை:

மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்தபடியே வேலை செய்யும் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக சிறுநீர் பிரிப்பு தொடர்பான கோளாறுகள் இந்நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது. சிறுநீர்ப்பையை முழுவதும் சுத்தம் செய்வதன் மூலம் சிறுநீரகம் தொடர்பான நோய்களை போக்குவதில் சிறந்த பலன் அளிக்கிறது நெருஞ்சி. சிறுநீரக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் நெருஞ்சியின் லித்தோட்ரிப்ட்டிக் பண்பு உதவுகிறது.

இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கிறது:

சிறுநீரகம் மட்டுமில்லாமல் இதயமும் ஆரோக்கியமுடன் செயல்பட நெருஞ்சி உதவுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவு நெருஞ்சியை எடுத்துக் கொள்ளும் ஒரு நபர் ஆரோக்கியமான இதய செயல்பாடுகளுடன் வாழ்வதாக அறியப்படுகிறது. நெருஞ்சியை உட்கொள்பவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் உண்டாவது குறைகிறது. மேலும் கொலஸ்ட்ரால்,இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கவும் நெருஞ்சி உதவுகிறது.

மனநலத்தை மேம்படுத்துகிறது :

செரோடோனின் ஹார்மோன் மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை ஊக்குவிக்க  உதவுகிறது. இந்த ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் மனச்சோர்வு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது நெருஞ்சி. இந்த மூலிகையைத் தொடர்ந்து உட்கொண்டு வருவதால் தலைவலி குணமாகிறது, தினசரி அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது மற்றும் உளவியல் சார்ந்த கோளாறுகள் நிர்வகிக்கப்படுகிறது.

வயது முதிர்வை தாமதப்படுத்துகிறது :

இந்த மூலிகை வயது முதிர்வை தாமதப்படுத்துகிறது. சருமத்தையும் உடலையும் புத்துணர்ச்சி அடையச் செய்து, தோற்றத்தை இளமையாக உணர வைக்கிறது . உடல் சார்ந்த முதிர்ச்சியில் இந்த மூலிகை வீரியத்தை அதிகரிக்க  உதவுகிறது. சருமம் சார்ந்த முதிர்ச்சியில் செல் சேதங்களைத் தடுத்து கண்ணுக்குத் தெரியும் சுருக்கங்கள், கோடுகள் மற்றும் வயது முதிர்வு சார்ந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது.

நெருஞ்சியை எப்படி உட்கொள்வது?

நெருஞ்சி பொடியை தண்ணீரில் கலந்து  அந்த நீரைப் பருகலாம்.

நெருஞ்சி இலைகளை நீரில் கொதிக்க வைத்து பருகுவதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு குறையலாம்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன் நெருஞ்சி பொடியுடன் தேன் கலந்து உட்கொள்ளலாம். இது ஒரு எளிய வழிமுறையாகும்.