வேப்பிலை சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயம்

 
Lemon Juice

இந்த பதிவில்  ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் வேப்பிலை இலை சாறு என்னென்ன நோய்களை குணமாக்குகின்றது என்று பார்த்து அதன்படி அதை உபயோகித்து பயன் பெறுவோம்

தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வருவோருக்கு  அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவி ,   குடல் இயக்கத்தினை  மேம்படுத்தி  மலச்சிக்கல் பிரச்சனை நீங்க வழி செய்கிறது .

neem

வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸை தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து .  சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் வராமல் தடுத்து ,இம்மியூனிட்டி பவரை அதிகமாக்குகிறது

 வேப்ப இலை சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவற்றை ஒன்றாக கலந்து தினமும் பருகி வந்தால் எண்ணற்ற நன்மைகள் நம் உடலுக்கு  கிடைக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது

அதன்படி தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் வெளியேறுகிறது. இதனால் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற நச்சுக்கள் நீங்கி நம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.