குழந்தை கேட்டு கோவிலில் அழுது வேண்டும் பெண்களுக்கு கர்ப்பத்துக்கு உதவும் விழுது இலை.

 

குழந்தை கேட்டு கோவிலில் அழுது வேண்டும் பெண்களுக்கு கர்ப்பத்துக்கு உதவும் விழுது இலை.

உலகெங்கிலும், பல தம்பதிகள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.

குழந்தை கேட்டு கோவிலில் அழுது வேண்டும் பெண்களுக்கு கர்ப்பத்துக்கு உதவும் விழுது இலை.

சித்த மருத்துவத்தில் உயர்வான குணங்களை கொண்ட மருத்துவ மூலிகை மரமாக விழுதி மரங்கள் கருதப்படுகிறது. இது திருக்கோவில்களில் தல மரங்களாக இருந்தாலும் இதன் நன்மைகள் அளப்பரியவை.

குழந்தை கேட்டு கோவிலில் அழுது வேண்டும் பெண்களுக்கு கர்ப்பத்துக்கு உதவும் விழுது இலை.

விழுதி மரங்கள் விளச்சி மரம் என்றழைக்கப்படுகிறது. இது வெப்ப மண்டலத்தில் வாழும் மரங்கள். இதன் இலைகள் தனித்தனியாக இருக்கும். பூக்கள் வெண்ணிறமாக இருக்கும். பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். சிறு செடி போன்று இருக்கும். இதன் பழங்கள் சுவையானது. நறுமணம் மிக்கது. நறுமணத்துக்காகவே பல இடங்களில் இது வளர்க்கப்படுகின்றன.விழுதி மரத்துக்கு எங்கே போவது என்கிறீர்களா அருகில் இருக்கும் திருத்தலங்களில் இல்லாவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் விழுது இலை பொடி கிடைக்கும். அதை வாங்கி வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். சூப்பில் சேர்த்து பருகலாம்.

​கருமுட்டைகளை அதிகரிக்கும்

குழந்தையின்மை பிரச்சனையை அதிகமாக எதிர்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். பெண்கள் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்ள பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று கருமுட்டை உருவாக்கம் குறைவாகவோ அல்லது ஆரோக்கியமில்லாமலோ இருப்பது. பெண்கள் கருமுட்டை பிரச்சனை எதிர்கொண்டால் அவர்கள் விழுதி இலை கஷாயம் குடிப்பதன் மூலம் பலன் பெற முடியும்.

விழுதி இலையை எடுத்து நன்றாக அலசி சாறெடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து 21 நாட்கள் வீதம் குடித்து வந்தால் கருமுட்டைகள் உருவாக்கம் அதிகரிக்கும். கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைப்பேறு விரைவில் நடக்கும். பெண்களுக்கு வெள்ளை வேட்டை பிரச்சனையும் நீங்க கூடும்.

கருவுறுதலுக்கு மேலும் சில டிப்ஸ்

ஆரோக்கியமான உணவு கருவுறுதலுக்கு நல்ல பலனை கொடுக்கும். எண்ணெய் அதிகமுள்ள துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படுகிறது, இது நீரிழிவு, உடல் பருமன், இதயம் தொடர்பான நோய்கள், பி.சி.ஓ.டி போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

ஆல்கஹால், மற்றும் புகைபிடித்தல் பழக்கம் ஆகியவை அதிகப்படியான கருவுறாமைக்கு காரணமாக இருக்கலாம். நமது உணவுச் உற்பத்தியில் இரசாயனங்கள் சேர்ப்பது மனித மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். உங்கள் உணவில் உங்கள் புரதத்தை அதிகரிக்கவும், கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும். தாவர புரதம், பால் பொருட்கள், அயன் , வைட்டமின் பி 12, , ஃபோலேட், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை மலட்டுத்தன்மையுள்ள தம்பதியினருக்கு உணவாக பரிந்துரைக்கலாம்.