இரத்தச் சர்க்கரையை அதிகரிக்காத மற்றொரு இயற்கை இனிப்பு இது

 
sugar sugar

பொதுவாக சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் இல்லாவிட்டாலும் கூட, சர்க்கரையை குறைத்துக் கொண்டு, ஆரோக்கியமான சர்க்கரைக்கு மாற்றான சில இனிப்பு மூலிகைகளை  பயன்படுத்தினால், நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக நோயின்றி வாழ முடியும்.இந்த இனிப்பு மூலிகைகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 

1.ஸ்டீவியா எனப்படும் இனிப்பு சீனித்துளசி  மூலிகைக்கு மிட்டாய் இலை , இனிப்பு இலை, சர்க்கரை இலை என வேறு பல பெயர்களும் உள்ளன. இதை இனிப்புக்கு மாற்றாக பயன் படுத்திடலாம் 
2.இதில் உள்ள ஸ்டீவியோசைடு, ரெபாடையோசைடு போன்ற வேதிப்பொருள்கள்தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள். 
3.வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கும் ஸ்டீவியாவில் மற்ற இனிப்புகளை கலக்கவாய்ப்புள்ளதால் பார்த்து வாங்கவும் 
4. மேலும் எடை இழப்புக்கு உதவும் குறைந்த கலோரி கொண்ட இயற்கை இனிப்பானாக, ஸ்டீவியா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. 
5.இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், ஸ்டீவியாவுடன் கூடிய இனிப்பு மற்றும் பானங்களை அதிகமாக உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தாது. 
6.இந்த ஸ்டிவியா மூலம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை, நன்றாக குறையும். :
7.மெலன் வகையை சார்ந்த பழமான 'மோன்க் பழம்' பிரத்யேகமாக சர்க்கரை நோயாளிகளுக்கானது. 8.ஸ்டீவியாவைப் போலவே இதுவும் இரத்தச் சர்க்கரையை அதிகரிக்காத மற்றொரு இயற்கை இனிப்பு. இது வெள்ளை சர்க்கரையை விட பல மடங்கு இனிமையானது, 
9.இந்த ஆரோக்கியம் மிகுந்த மாங்க் பழம், வயிற்று உப்புசம், பதட்டம் மற்றும் தலைவலி போன்ற தீங்கு விளைவிக்கும் பக்கவிளைவுகளைக் கொண்ட செயற்கை இனிப்புகளுக்கு மிகச் சிறந்த மாற்றாகும். 
10.இந்த ஆரோக்கியம் மிகுந்த மாங்க் பழத்தில் குறைந்தளவு கலோரிகளே உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும், எடைக்குறைப்பு செய்பவர்களும் இதை தைரியமாக சாப்பிட அவர்களின் ஆரோக்கியம் பெருகும்