உங்கள் நகங்களில் தெரியும் பல நோய்களின் முகங்கள்
பொதுவாக நம் நகங்களின் நிறத்தை வைத்து நமக்கு இருக்கும் நோய் குறிகளை கண்டுபிடிக்கலாம் .அந்த வகையில் நகத்தில் என்ன நிறம் இருந்தால் என்ன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக நகங்களில் கருப்பு கோடுகள் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

2.உடலில் பிளவுடன் கூடிய ரத்தப்போக்கு, இருதயத்தில் பிரச்னை, சோரியாஸிஸ், சோர்வு போன்ற பிரச்னைகளுக்கான முக்கிய அறிகுறியாக நகங்களில் காணப்படும் கருப்பு வரிகள் குறிப்பிடப்படுகின்றன.
3.ஒரு சிலருக்கு சாதாரணமாகவே நகங்களில் கருப்பு வரிகள் காணப்படும்.
4.ஆனால் திடீரென ஒருசிலருக்கு விரல் நகங்களில் கருப்பு வரிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் .
5.இந்த நகத்தின் கருப்பு கோடுகளை குணமாக்க ஒரு சிலருக்கு ஆண்டிபயாடிக்ஸ் கொடுத்தால் போதுமானதாக இருக்கும்.
6.சிலருக்கு பாதிப்பு அதிகம் இருந்தால் அறுவை சிகிச்சையும் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.
7.சிலரின் நகங்கள் அதிகம் நீல நிறத்தில் காணப்பட்டால் அது செத்து போச்சு என்று அர்த்தம்.
8.நகங்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் நீல நிறத்தில் மாறி விடும்.
9.மேலும் இந்த நக கருப்பு கோடுகள் நமக்கு இருக்கும் நுரையீரல் பிரச்சனை, எம்பிஸிமா போன்ற பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.
10.சிலருக்கு இருக்கும் விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.


