பெயின் கில்லர் போட்டும் சரியாகாத தசை பிடிப்பை செலவில்லாம நான் எப்படி சரிசெஞ்சேன் தெரியுமா ?

 
moottu pain tips from aththi milk moottu pain tips from aththi milk

க டுமையாக வேலை செய்து கொண்டிருக்கும்போது, விளையாடும்போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்து விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை தசைப்பிடிப்பு. சில நேரங்களில், இரவில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட, தசைகள் பிடித்து பிரச்னை உருவாகும்.
எழுந்து நடக்க முடியாத அளவுக்கு தசை பிடிப்பு இருக்கும். சில நேரங்களில், தாங்க முடியாத வலியை கூட ஏற்படுத்தும். மனிதனின் இயக்கத்துக்கு, தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த தசைகள் சுருங்கி, தளரும் தன்மை கொண்டவை. இவை, இயற்கைக்கு மாறாக சுருங்கி வலியை ஏற்படுத்துவது தசைபிடிப்பு.

கெண்டை கால், தொடையின் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்னல் வெட்டுவதுபோல ஒரு வலி ஏற்பட்டு நரம்போடு சதையும் சுறுண்டுகொள்வதுபோல் தோன்றும். பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற வலியால் அதிகம் அவஸ்தைப்படுவது உண்டு. இந்த தசை பிடிப்பு எதனால் ஏற்படுகிறது. இதற்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.

மருத்துவர்கள் அனைவருக்கும் பொதுவாகக்கூறும் ஒரே ஒரு அறிவுறை "தண்ணி நல்லா குடிங்க, தண்ணி குடிச்சாவேபோதும்" என்பதுதான். உடலில் இந்த தண்ணீர் பற்றாக்குறை காரணமாகத்தான் தசை பிடிப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக ஊட்டச்சத்து பற்றாக்குறை இருக்கும் அதனுடன் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும்போது அவர்களுக்கு தசை பிடிப்பு அதிகமாக காணப்படுகிறது. அதேபோல உடற்பயிற்சி செய்யும் பலரும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள தவறுகிறார்கள், தண்ணீரும் போதுமான அளவு குடிப்பது இல்லை. இதனால் அவர்களுக்கும் தசை பிடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன.

இதையெல்லாம் தாண்டி, கோடை காலத்தில்தான் இந்த தசை பிடிப்பு பலருக்கும் ஏற்படுகிறது. உடலில் ஏற்கனவே நீர் பற்றாக்குறை உள்ளவர்கள் மட்டும் இன்றி பொதுவாக அனைவருக்குமே இந்த தசை பிடிப்பு ஏற்படும். சாதாரண நாட்களை விட கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதே இதன் அறிகுறி.