முருங்கை பூ சூப் ,ஆப்பு வைக்கும் நோய்கள் பத்தி தெரிஞ்சா ,வேறு எந்த சூப்பும் குடிக்க மாட்டிங்க

 
family

முருங்கை மரத்தில் இலையும், காயும் மட்டும் தான் பலன் கொடுக்கும் என்றில்லை. முருங்கைப்பூவும் அதிகப்படியான பலன்களை கொண்டிருக்கிறது. சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்று அழைத்தார்கள். முருங்கையின் பயன்களை ஒரு புத்தமாகவே வெளியிடலாம். முருங்கை இலை, வேர், பூ, பிஞ்சு, காய், பட்டை என்று அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

முருங்கைப்பூ கொத்து கொத்தாக மரங்களில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவை இல்லறவாழ்க்கைக்கு குறிப்பாக ஆண்மை குறைபாடுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது . எப்படி எதனுடன் பயன்படுத்தலாம் என்றூ பார்க்கலாம்.

​தாம்பத்திய உறவில் நாட்டம்

இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாத போது முருங்கைப்பூவை பாலுடன் சேர்த்து ஒரு மண்டலம் என 48 நாட்கள் வரை குடிக்கலாம். இதை எடுத்துகொள்ளும் போதே உடல் உறவில் ஈடுபாடு உண்டாகும்

குழந்தைப்பேறை எதிர்பார்க்கும் தம்பதியர் இருவருமே முருங்கைப்பூ உணவில் சேர்க்கலாம். இவை எதிர்கொள்ளும் கருவின் பலத்தை உறுதி செய்ய கூடும். ஆரோக்கியமான தம்பதியருக்கு குழந்தைப்பேறில் கால்தாமதம் உண்டாகும் போது இவை உதவும்.

முருங்கை பூவை சூப்பாக  பருகினால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றது.

தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

முருங்கைப்பூ சூப் எப்படி தயாரிப்பது?

முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த சூப் நன்றாக கொதித்த உடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இதனை பாலில் இட்டு கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். 

நன்மைகள்

 முருங்கைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் காய்ச்சல், சளி, உடலில் உண்டாகும் பூஞ்சை பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது.

 சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முருங்கைப்பூ சூப் பருகலாம்.

 வெள்ளைப்போக்கு உடலுக்கு தேவையற்ற சுரப்பிகளால் ஏற்படுகிறது. வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்த இந்த முருங்கைப்பூ சூப் பயன்படுகிறது.

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூ சூப்  அறுமருந்தாக பயன்படுகிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

 முருங்கைப்பூ  சூப் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்தும் விடுபட முடிகிறது. உடலுக்கு இது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது


முருங்கைப்பூவை சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நறுக்கி வைக்கவும் சாம்பார் வெங்காயத்தை தோலுரித்து ஒன்றிரண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் / நெய் விட்டு தாளிப்பு பொருள்கள் சேர்த்து வெங்காயம் , முருங்கைப்பூ சேர்த்து நன்றாக வதக்கி பச்சை வாசனை போனதும் இறக்கவும். இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கருவுறுதல் தாமதிமில்லாமல் உடனடியாக உண்டாக கூடும்.