சுகரை குறைக்க எந்த பாலில் டீ போட்டு குடிச்சா நல்லதுன்னு தெரிஞ்சிக்கோங்க

 
sugar sugar

ஒரு சினிமாவில் வடிவேலு ஒட்டக பாலில் டீ போட சொல்லி ஒரு டீ கடையில் தகராறு செய்வார் .அந்த காமெடி காட்சியை நிறைய பேர் பார்த்திருப்பர் ,ஆனால் அந்த காமெடியில் வருவது போல ஒட்டக பாலில் டீ குடித்தால் அது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பதாக கண்டறிந்துள்ளனர் .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
இந்த பதிவில் ஒட்டகப்பால் அருந்தினால் சர்க்கரை நோய் குணமாகுமா என்பது குறித்து பார்க்க போகிறோம்.

1வெளி நாட்டில் நடந்த ஒரு ஆராய்ச்சியாளர்கள் முதல் கட்ட சர்க்கரை நோயாளிகளை இரண்டு குழுவாக பிரித்து ஒரு குழுவில் உள்ளவர்களுக்கு 500 ml ஒட்டகப்பாலை கொடுத்துள்ளனர்.
2.மற்ற குழுவில் உள்ளவர்களுக்கு ஒட்டகப்பாலை கொடுக்காமல் இருந்துள்ளனர் .
3.அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒட்டகப்பால் எடுத்துக்கொண்ட குழுவில் உள்ள நோயாளிகளுக்கு சராசரி இரத்த சர்க்கரையின் அளவு 120லிருந்து 93ஆக குறைந்திருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர் 
4. 3 மாத சராசரி சர்க்கரையின் அளவு ஒட்டகப்பால் எடுத்துக்கொண்டவர்களுக்கு சராசரியாக 7.8 லிருந்து 5.4 ஆக குறைந்திருந்தது கண்டு மகிழ்வுற்றனர் .
5.மேலும் இந்த சுகர் பேஷண்டுகளுக்கு இன்சுலின் டோஸ்யுடைய தேவை ஒரு நாளில் 32 யூனிட் அளவிலுருந்து 17 யூனிட் அளவாக குறைத்துள்ளது,
 6.மேலும் 3 சுகர் பேஷண்டுக்கு  இன்சுலின் தேவையில்லை என்ற அளவிற்கு குறைந்துள்ளது.
7.எனவே ஆராய்ச்சியின் முடிவில் ஒட்டகப்பால் குடிப்பதினால் சர்க்கரை நோய் முழுமாக குணமாகாது,  8.இன்சுலின் தேவையை குறைக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.
9.அது மட்டுமல்லாமல்  இந்த ஒட்டகப்பால் இரண்டம் நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படாது என்றும் கூறியுள்ளனர்.