பெருங்காயத்தில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ குணங்கள் என்ன இருக்கிறது தெரியுமா ?

 
toilet
பொதுவாக நாம் சமையலில் சேர்க்கும் பெருங்காயத்தில் நம் உடலுக்கு தேவையான பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது .பெருங்காயத்துடன் லெமன் சேர்த்து குடித்தால் பல் வலி குணமாகும் .மேலும் பெருங்காயத்தை சுடுநீரில் கலந்து குடித்தால் தலை வலி குணமாகும் .ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற தடுப்பானாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம் 
1.பெருங்காயம் செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கிறது. 
2.பெருங்காயம் வாய்வு போன்ற செரிமான சிக்கல்களைத் தணிக்க இது உதவுகிறது. 
3.பெருங்காயமானது, ஆன்டி ஸ்பாஸ்மோடிக் மற்றும் ஆன்டி இன்பிளாமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. .
4.தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். 
5.பெருங்காயம் மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
6.பெருங்காயம் நரம்பு பிரச்சனைகளை தீர்க்கும். 
7.சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது  மூளையை இயல்பாக்கி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
8.பெருங்காயம் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. 
9.பெருங்காயம் மார்பு நெரிசலைக் குறைக்கிறது. மேலும், கபத்தை விடுவிக்கவும் இந்த பெருங்காயம் பெரிதும் உதவுகிறது.
10.பெருங்காயம் உயர் இரத்த அழுத்தத்தினை குறைத்து இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. 
11.பெருங்காயம் இரத்த உறைவதை இயற்கையாகவே தடுக்கும் திறன் கொண்டது. 
12.பெருங்காயம் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் பெற உதவுகிறது.