செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள் என்ன தெரியுமா ?

 
mango

முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். நமது நாட்டின் தேசியக் கனி அது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் உற்சாகமடையச் செய்யும் மாயாஜாலக் கனியான மாம்பழத்தை, 'மாதா ஊட்டாத சோற்றை மா ஊட்டும்' எனச் சிறப்பித்துக் கூறுவர்.

'மாம்பழத்து வண்டு' எனும் பதம், 'பூவை மட்டுமல்லாமல், பழத்தைத் தேடியும் வண்டுகளை வரவழைக்கும் சாமார்த்தியம் மாங்கனிக்கு உண்டு' என்பதை உணர்த்துகிறது. நாவிலே இனிமையாய்ப் படரும் அதன் சுவைமிக்க சாறு, மன மகிழ்ச்சியை அளிக்கும்.

உலக மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட பெருங்கொடை மாங்கனி. புத்த பிட்சுகளுக்கு அனுமதிக்கப்பட்ட சில உணவு வகைகளுள் மாம்பழமும் ஒன்று. மா ஊறுகாய், மாவடு இல்லாமல் பலரது மதிய உணவு நிறைவு பெறாது எனச் சொல்லலாம்.

கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படும் நிலையில் இதை இல்லாமல் பழுக்க வைக்க முடியாது என வியாபாரிகள் அழுத்தமாக தெரிவிக்கிறார்கள்

 

இந்த நிலையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு விவசாயிகள் இன்று பின்பற்றும் இயற்கை வழிமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்.

முக்கனியில் பழுத்த மாம்பழம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட தாக எழுந்த குற்றச்சாட்டிற்கு காய்கறி வியாபாரிகள் அளித்த விளக்கம்.

இது கோடை காலம் வந்தவுடன் மாம்பழம் சீசன் வந்துவிடும் தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், என எல்லா இடங்களிலும் மாம்பழம் இருக்கும்.

மஞ்சள் மாம்பழத்தின் வாசனை எப்போதும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது

 

மரங்களில் சுரக்கும் எத்திலின் வாயுவால் இயற்கையாகவே பழுத்து நமக்கு கிடைக்கும் மாம்பழங்கள் எப்பொழுதும் தனி சுவையுடன் இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் மாம்பழங்கள் அப்படி பழுக்க வைப்பது இல்லை.

 

ஏனென்றால் அது காயாக இருக்கும் பருவத்தில் அறுவடை செய்யப்பட்டு செயற்கை முறையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த பின் சந்தைக்கு வருகிறது.

இந்த வேலையை விவசாயிகள் செய்கிறார்களா அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் வியாபாரிகள் இதனை செய்கிறார்கள் இதற்கு காரணம்.

மா தோப்புகளை ஒரு குறிப்பிட்ட பெரிய தொகைக்கு குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள் முதிர்ச்சி அடையும் முன் முழுவதையும் பறித்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

பழுத்த பழங்கள் முதல் பிஞ்சு வரை அனைத்தையும் குவித்து பழுப்பு நிறத்தில் வைத்திருப்பதுதான் இந்த கார்பைடு கல் விஷம்.

 

கார்பைடு கல் இல்லாமல் காய்கள் காய்க்காது என வியாபாரிகள் பல்வேறு வகையான பொய்களை தெரிவித்தாலும், விவசாயிகள் பலர் இயற்கையான முறையில் பழங்களை பழுக்க வைக்கிறார்கள்.

மாம்பழங்கள் இயற்கையாக பழுக்க வைக்க அறுவடையில் கவனம் செலுத்துவது மிக முக்கியம் முதிர்ந்த காய்களை மட்டும் முதலில் அறுவடை செய்ய வேண்டும்.

பறித்த மாம்பழங்களில் இருந்து பால் வடிந்ததும் பழைய பேப்பரை தரையில் விரித்து பரப்பி வைத்தால் பழங்கள் பழுத்துவிடும்.

காய்களை இயற்கையாகப் பழுக்க வைக்க சில வழிமுறைகள் உள்ளன அதிக எண்ணிக்கையிலான பழங்கள் இருந்தால் அவற்றை இருட்டு அறையில் புகை மூட்டம் போட்டு பழுக்க வைப்பது பழமையானது.

ஆவாரம் இலை, வேப்ப இலை, என அந்தந்தப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் இலைகளை மூடி பழுக்க வைப்பது விவசாயிகளின் வழக்கம்.

இல்லத்தரசிகள் ஆவாரம் இலை கூட பயன்படுத்தாமல் அரிசியில் பழங்களை பழுக்க வைத்து விடுவார்கள்.

புகைப் போடாமல் வைக்கோலைப் பயன்படுத்தி பழுக்க வைக்கும் முறைகளும் இருக்கிறது, இவ்வாறு வைக்கும்போது வெளியாகும் வெப்பத்தால் மாங்காய்கள் ஒரே வாரத்தில் இயற்கையாகவே பலூத்துவிடும்.

இயற்கை முறையில் பழுக்க மரத்தில் மாம்பழங்களை வகைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்கள் அதிக நாட்கள் சேமித்து வைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு குறிப்புகள்

 இயற்கையான முறையில் கிடைக்கும் மாம் பழங்களை சாப்பிடுவதால் மாம்பலத்தில் உள்ள அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படும் குறிப்பாக வாந்தி, வயிற்றுப்போக்கு, தலை சுற்றல், குமட்டல், தலைவலி, போன்றவை.