வாராவாரம் மணத்தக்காளி கீரை சாப்பிடுவோர் உடலுக்கு என்ன வரம் கிடைக்கும் தெரியுமா ?

 
manathakkali keerai

மணத்தக்காளி கீரையில்  நமது உடல்நலமாயிருக்க தேவையான மருத்துவ குணங்கள் அனைத்தும் அடங்கியுள்ளது .இதுஒரு மருத்துவ மூலிகை என்று கூறினால் பொருத்தமாயிருக்கும் 
மணத்தக்காளி கீரையை  யார் வேண்டுமானாலும் உணவில் சேர்த்து கொள்ளலாம் .எந்த கட்டுப்பாடுமின்றி எந்த வயதினரும் உணவில் சேர்த்து கொண்டால் பல நோய்க்ளை கட்டுப்படுத்தலாம் 
மணத்தக்காளி கீரையை வாரா வாரம்  அனைவரும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் உடலுக்கு நோயில்லாத வரம் கிடைக்கும் 

அடிக்கடி மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்...!!

குழந்தைகள்முதல் பெரியவர் வரை என அனைவருக்கும் ஏற்ற உணவுப்பொருளாக திகழ்கிற இக்கீரை, வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற கொடிய நோய்களை கொல்லும் ..
இந்த கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டால் கிடைக்கும் தொடர்ச்சியான நன்மைகள்! 

அதிக அளவு உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர,உடல் சூட்டை குறைத்து  நல்ல பலன் கிடைக்கும்.
ரத்தசோகை(Anemia) மற்றும் வீக்கான  இதயம் உள்ளவர்கள் இதனுடைய காய்கள், இலைகளைத் தூள் செய்து 100 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, காலை மற்றும் இரவு நேரங்களில் சாறாக அருந்தி வர இப்பிரச்னைகள் எல்லாமே பஞ்சாய் பறந்து போய் விடும் 
மணத்தக்காளி கீரையை வாரம் இரண்டு முறை அனைவரும் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு, சளித்தொல்லை போன்ற பிரச்சினைகள் ஆயுளுக்கும் இருக்காது என்று அடித்து கூறலாம்