கல்லீரலில் கல்லை கொட்டினாலும் செரிக்கணும்னா ,இந்த உணவை கொஞ்சம் கொரிக்கணும்
மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிப்பதாக் கூறப்படுகின்றது . பித்தநீர் சுரக்கவும், ஈமோகுளோபினின் அமைப்பில் பங்களிக்கும் இரும்பு, ஏனைய சில தனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், கொலஸ்டிரால், கிளைகோஜன் வடிவில் காபோவைதரேட்டு, சில இயக்குநீர்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்கவும், யூரியா உற்பத்தி, பிளாசுமா புரத உற்பத்தி போன்ற உற்பத்திகளில் ஈடுபடுவதும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும், வேறு பல நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த செங்குருதியணுக்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு கொழுப்பு உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் பித்தப்பையில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும். கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் மஞ்சள் காமாலை நோய் உண்டாகும்.
![]()
விட்டமின் சி கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கும். எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. எலுமிச்சையில் உள்ள கூறுகள் கல்லீரல் செல்களின் ஆற்றலை அதிகரிக்கின்றன. செரிமானத்தை ஆதரிக்கும் நொதிகளை கல்லீரலில் உற்பத்தி செய்ய உதவும் எலுமிச்சை, தாதுக்களை உறிஞ்சுவதையும் ஊக்குவிக்கிறது. எலுமிச்சை சாறு குடிப்பது பலவிதங்களில் நன்மை பயக்கும்.
அதேபோல, வைட்டமின் சி அதிகம் உள்ள பீட்ரூட் பிட்டாவைத் தூண்டுகிறது மற்றும் நொதி செயல்பாட்டை ஊக்குவிக்கிறது பீட்ரூட் ஒரு இயற்கையான ரத்த சுத்திகரிப்பு காய் என்பதால், அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பெர்ரி பழத்தில் உள்ள பாலிபினால்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெர்ரி பழங்களில் சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கல்லீரலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன.
திராட்சைப் பழம் கல்லீரலுக்கு மிகவும் நல்லது., கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளை உட்கொள்வது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றுநோயைக் குறைக்க திராட்சை உதவுகிறது. எனவே, திராட்சையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
வயிறு சம்பந்தமான செரிமாணக் கோளாறுகளை தீர்க்கும் வாழைப்பழம், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டால், உணவு எளிதில் செரிக்காது. அத்தகைய சூழ்நிலையில், வாழைப்பழத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளலாம்.
கல்லீரல் கோளாறுகளை நீக்குவதில் ஆப்பிள் சாப்பிட்டால் முக்கியமான பங்கு வகிக்கிறது. பெக்டின் சத்தைக் கொண்டுள்ள ஆப்பிள், செரிமான அமைப்பு மற்றும் கொலஸ்ட்ராலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இதனால் கல்லீரலின் வேலை சுலபமாகிறது. ஆப்பிளில் மாலிக் அமிலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.
பசும் இலைகளை கொண்ட காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. கீரை, பச்சை பட்டாணி, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.


