நம்மை வச்சி செய்யும் இதய நோய்களை வச்சி செய்யும் இந்த லிச்சி பழம்

 
litchi fruit for heart litchi fruit for heart

லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.

லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது. முட்டை வடிவத்தில் இருக்கும். இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. லிச்சிபழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிது.

எதற்காக லிச்சி பழத்தை உடல் நலம் தரும் பழம் என கருதுகிறோம்?

லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.

பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி:-

லிச்சி பழம் வைட்டமின் சி யை ஆதாரமாக உள்ளது. இதில் வைட்டமின் சி, மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளதால் நோயை எதிர்க்க கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.

litchi fruit

இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது.

மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.

ரத்த உருவாக்கத்தை அதிகப்படுத்துகிறது:-

தினமும் ஒரு லிச்சி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.

ஏனெனில் சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.

லிச்சியில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் உடலில் நீர் சக்தியை சமன் செய்கிறது. சோடியம் அளவு குறைந்திருக்கிறதும் இதே பயன் பாட்டிற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தின்போது நீரின் சமமான தன்மை ஒரு முக்கிய பகுதி ஆகும். இதன்மூலம் ஹைபர் டென்ஷன் குறைக்கப்படுகிறது.

பொட்டாசியம் ஒரு சிறந்த குழல் விரிப்பியாக செயல்படுவதால், இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளின் ஒடுக்கமான தன்மை குறைகின்றது. இதன்மூலம் இதய அழுத்தம் குறைகிறது, உலர் லிச்சியின் பொட்டாசியம் அளவு பிரெஷ் லிச்சியை விட 3 மடங்கு அதிகமாகும்.


தாமிரம் லிச்சி பழத்தில் அதிக அளவு காணப்படுகிறது. சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் பொதுவாக இரும்பு சத்துக்களுடன் தாமிரமும் இணைந்திருக்கும். இதனால் லிச்சியில் தாமிரம் அதிகமாக இருப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதன் மூலம் உடல் புத்துணர்ச்சி அடையும். உடல் உறுப்புகளுக்கும் செல்களுக்கும் ஆக்ஸிஜென் வேகமாக கிடைக்கப்பெறும்.

லிச்சியில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. இந்த பழம் உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், அதிகமாக உட்கொள்ளும்போது மூக்கில் இரத்தம் வருதல், காய்ச்சல், வறண்ட தொண்டை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு

மேலும் வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்பு சத்துகளை உரிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினமொரு லிச்சி பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.