குளிர்காலத்தில் உதடு வெடிப்பால் ,உயிர் போகும் வலியா?ஒரு வழி இருக்கு படிங்க .
பொதுவாகவே குளிர்காலங்களில் தான், நம்முடைய உதடுகள் வெடிப்பு விடும். அந்த சமயத்தில் நம்முடைய உதடுகளை பாதுகாக்க தேங்காய் எண்ணெய், அல்லது நெய் அல்லது வெண்ணை எப்போதுமே உதடுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது வருது வெயில் காலம். இந்த சமயத்தில் உங்களுடைய உதடுகள் ட்ரையாக மாறுகிறது என்றால், உங்களுடைய உடலில் நீர்ச்சத்து இல்லை என்பதுதான் அர்த்தம். அடிக்கடி தண்ணீர் பருகி கொண்டே இருக்க வேண்டும். நிறைய தண்ணீரை குடித்தால் தான் உதடுகள் வறட்சியடையாமல் இருக்கும்.
மஞ்சள் உதட்டு தைலம், அதாவது மஞ்சள் லிப் பாம் தயாரிக்க, ஒரு டீஸ்பூன் கிளிசரின், இரண்டு டீஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி, ஒரு தேக்கரண்டி தேன், மஞ்சள் மற்றும் மர தேயிலை எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சளில் இருந்து லிப் பாம் தயாரிக்க, பெட்ரோலியம் ஜெல்லி, கிளிசரின், தேன், மஞ்சள் மற்றும் மரம் தேயிலை எண்ணெயை (tree tea oil) ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கவும். இது ஒரு மென்மையான பேஸ்டாக ஆனவுடன் மூடியுள்ள டப்பாவில் வைக்கவும். இதன் பிறகு இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைக்கவும். 3 முதல் 4 மணி நேரத்தில் உங்கள் லிப் பாம் தயாராக இருக்கும்.
![]()
உதடு சிவப்பாக டிப்ஸ்
காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும்
உதடு சிவப்பாக முகத்தை தேய்க்கும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் பயன்படுத்தினால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.
உதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவி கொள்ளவும். பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் மாற்றம் தெரியும்.
. உதடுகளை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்கவைக்க தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கபடுவதோடு உதடு சிவப்பாக மாறும்.
. கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான வழி.


