எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து வாய் கொப்பளித்தால் வாயில் நடக்கும் அதிசயம்

 
coffee with lemon

பெரும்பாலானோர் வீடுகளில் சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் எலுமிச்சை பழம் .இது  நிறைய மருத்துவ குணங்களை தன்னிடம் அடக்கியுள்ளது .இதை நாம் எலுமிச்சை சாதம் ,லெமன் ஊறுகாய் ,;லெமன் சட்னி ,லெமன் ஜூஸ் என்று பல வடிவங்களில் நாம் எடுத்து கொள்கிறோம் .இதில் உள்ள தனித்துவமான புளிப்பு சுவையே இதன் மருத்துவ குணங்களுக்கு காரணம் .இந்த செடியை நாம் வீட்டிலேயே வளர்க்கலாம் ,அதிக சூரிய ஒளியில் வளரும் இந்த லெமன் மரம் நமக்கு நிறைய பழங்களை ஆண்டு முழுவதும் கொடுக்கும்

benefits of lemon

 

இவ்ளோ நன்மைகள் தரும் எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறைந்து நம் வாய் புத்துணர்வோடு இருக்கும் .

 எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட வாந்தி வருவது சரியாகும் ,மேலும் இருதய அடைப்புகளை கூட நீக்கும் தன்மை உடையது இது .

எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்தியும் அதிகரித்து நன்றாக பசியெடுக்கும் ஆற்றல் கொண்டது இது .

கல்லீரலைப் பலப்படுத்தவும் ,லிவர் பிரச்சினை ஆயுளுக்கும் வராமல் இருக்க  சிறந்த டானிக் எலுமிச்சை.

மேலும் எலுமிச்சை பித்தநீர் சரியான அளவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் ,கற்கள் பித்தப்பையில் உருவாகாமலும் காக்கிறது

சிலருக்கு ஸ்கின்னில் புண்கள் ஏற்படும் .அந்த சருமப் புண்களுக்கு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.

எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைந்து நம்மை இளமையாக காட்சியளிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது