எமனையே எட்டி உதைக்க உதவும் லெமன் டீ -எப்படி தயாரிக்கணும் தெரியுமா ?
உலகம் முழுவதும் சூடாக அருந்தும் பானங்களில் முதன்மை பங்கு வகிக்கிறது ‘தேனீர்’ தான் தெரியுமா? சாதாரண சிறு கடைகள் முதல் மிகப்பெரிய ரெஸ்டாரன்ட்கள் வரை அத்தனை இடங்களிலும் இந்த தேநீர் என்னும் சுவை மிகுந்த பானம் கிடைக்கப் பெறுகின்றது. உலகின் பெரும்பாலான பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தேநீரை அதிகமாக தயாரித்து விரும்பி அருந்தி வருகிறார்கள்.
இவைகளில் லெமன் டீ என்பது க்ரீன் டீயை விட பன்மடங்கு நன்மைகளை தரக் கூடியதாக இருக்கின்றது. ஐந்தே நிமிடத்தில் லெமன் டீ போடுவது எப்படி? அது எந்தெந்த வகைகளில் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கிறது? என்பதையும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
‘லெமன் டீ’ தயாரிக்க தேவையான பொருட்கள்: தண்ணீர் – ரெண்டு கப் டீ தூள் – அரை ஸ்பூன் சர்க்கரை அல்லது தேன் – ரெண்டு டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு – இரண்டு டீஸ்பூன்.

லெமன் டீ குடிப்பது நல்லதா
லெமன் டீ பயன்கள்
செய்முறை:
தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீ தூளை கலந்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் அரை எலுமிச்சம் பழ சாற்றைக் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயாராகிவிடும்.
லெமன் டீ பயன்கள்:
மெட்டபாலிசம்:
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் லெமன் டீயைக் குடிப்பதால், அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் லெமன் டீ குடிப்பது சுறுசுறுப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
எடையை குறைக்க உதவுகிறது:
லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கான மூல காரணியாக இருக்கும் அமைப்பிலிருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடலை சுத்தப்படுத்துகிறது.
குறிப்பு:
லெமன் டீயில் இஞ்சியைச் சேர்க்கலாம், ஏனெனில் இது ஒரு பயோஆக்டிவ் ஆகும், இது தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது:
நாம் சாப்பிடும் உணவுகள் நன்றாகச் செரிமானம் ஆவதற்கு லெமன் டீ பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத சில உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், லெமன் டீ அவற்றைக் கரைத்து, உடல் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோயிலிருந்து தடுக்கிறது:
எலுமிச்சையில் குவெர்செட்டின் உள்ளது, இது ஃபிளாவனாய்டு ஆகும், இது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.


