காலையில் வெதுவெதுபான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது எந்த நோய்க்கு நல்லது தெரியுமா ?

 
leman tea leman tea

பொதுவாக லெமன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்க வல்லது இந்த லெமனை நாம் ஜூஸாகவோ அல்லது தண்ணீரில் சாறு பிழிந்தோ குடித்து வரலாம் .மேலும் லெமன் ரைஸ் செய்தும் இந்த லெமனின் சத்துக்களை நாம் பெறலாம் .இந்த லெமன் கேன்சர் நோயாளிகளுக்கு எப்படி பலனளிக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
1.புளிப்பு சுவையுடைய எலுமிச்சை பழத்தில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் சி அதிகமுள்ளது, 
2.இதுதவிர எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, நிறைந்துள்ளது 
3.மேலும் எலுமிச்சை பழம்  இதய ஆரோக்கியம், எடை கட்டுப்பாடு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
4.ஒரு எலுமிச்சை சுமார் 31 மில்லிகிராம் வைட்டமின் சி வழங்குவதால் நம் ஆரோக்கியம் சிறக்கும் .
5.எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
6.எலுமிச்சை பழம் உடலில் கூடுதல் கலோரிகளை எரிப்பதோடு, எடை இழப்பிற்கும் உதவுகிறது.
7.இது தவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காலையில் வெதுவெதுபான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது சிறந்த பலன் கொடுக்கும்.
8.இந்த லெமன் ஜூஸை  காலை உணவுக்கு முன் குடிப்பது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது, அது மட்டுமல்லாமல் நுரையீரல் தொற்றுக்களை லெமன் ஜூஸ் குறைக்கிறது. 
9.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் லெமன் ஜூஸில் உள்ள வைட்டமின் சியின் பங்கு மிக முக்கியமானது.
10.லெமனில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன.