நாவல் இலைகளை மென்றால் எந்த நோயாளிக்கு நன்மை செய்யும் தெரியுமா ?

 
sugar

பொதுவாக சர்க்கரை நோய் இப்போது உலகெங்கும் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் .மேலும் இதற்கு நமது மாறிவிட்ட உணவு முறையும் ,வாழ்க்கை முறையும்தான் காரணமாய் இருப்பது அதை விட கவலைக்குரிய விஷயம் இந்த பதிவில் சுகரை குறைக்க உதவும் இயற்கை வழிகள் பற்றி நாம் பார்க்கலாம்

sugar

1.இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். 2.சிலருக்கு சுகர் அளவு குறையாமல் இருக்கும் . ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும்.

3.சுகர் குறையாமலிருந்தால் உணவில்  இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

4.நாவல் பழ விதைகளின் பருப்பு சர்க்கரையை கட்டுப்படுத்தி சர்க்கரை நோய்க்கான அறிகுறியை பறந்தோட வைக்க உதவும் .

5.எனவே சர்க்கரை நோயாளிகள் நாவல் இலைகளை மெல்ல பரிந்துரைக்கப்படுகிறது.

6.உணவில் பாகற்காய் சேர்ப்பது நலம் சேர்க்கும் .பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும்.

7.சுகரை குறைக்க பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

8.சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேப்பிலைகளை கூட பயன்படுத்தலாம். வெறும் வயிறில் சாப்பிடுவது நலம்

9.வேப்பிலை  சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.

10.கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

11.நாவல் பழ விதைகல் நலம் சேர்க்கும் .மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.