குதிரை பலம் கொடுக்கும் குதிரைவாலி அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்:
பொதுவாக சாதாரண பாலிஷ் செய்த அரிசியை விட குதிரை வாலி அரிசியில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த பதிவில் இந்த குதிரை வாலி அரிசியை சமைத்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

குதிரைவாலி அரிசியை அடிக்கடி சமைத்து சாப்பிடுவோருக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் . ஏனெனில் இதற்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக முன்னோர்கள் குறிப்பட்டுள்ளார்கள்
நம் உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் போன்றவற்றை குணப்படுத்தவும் இந்த குதிரை வாலி அரிசி உதவுகிறது.
சிறுநீர் மற்றும் கண்
இதனால் குதிரைவாலி அரிசியை உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைதத்து சிறுநீரை பெருக்க உதவுகிறது.
கண் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்த இந்த குதிரை வாலி அரிசி பெரிதும் உதவுகிறது.
மலச்சிக்கல் &இம்முயுனிட்டி பவர்
குதிரைவாலி அரிசி மலச்சிக்களை தடுத்து , கொழுப்பினை கரைக்க உதவுகிறது.:ஏனெனில் இதில் இரும்பு சத்து ஏராளமாய் அடங்கியுள்ளது
குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஜென்மத்திற்கும் ஜலதோஷம் பிடிக்காமல் காப்பாற்றும் தன்மையுடையது இந்த அற்புதமான குதிரைவாலி அரிசி


