இந்த ஆறு தவறுதான் உங்க கிட்னியை கூறு போடும் -ஜாக்கிரதை

 
kidney

நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு சிறுநீரகம். பல வேலைகளை செய்யும் சிறுநீரகம் நாம் செய்யும் சில தவறுகளால் பாதிப்படைகிறது. இந்த கிட்னியை பாதுகாக்க நாம் பின்வரும் தவறுகளை செய்யாமல் இருந்தால் போதுமானது

kidney

1.சிலர் சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கி வைத்திருந்து ,அவதி படுவோர் .பொதுவாக பேருந்து பயணத்தின் போது அல்லது பள்ளி கல்லூரி மற்றும் ஆபீசில் வேலையால் சிறுநீர் அடக்கி வைத்து அவதிப்படுவர் .இது கிட்னியை  பாதிக்கிறது

2.பலர் வேலையில் மூழ்கி இருப்பதால்  ,போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருத்தல் அவர்களின் கிட்னியை பாதிக்கிறது

3.பலர் தங்கள் உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பை சேர்த்தால் அது கூட கிட்னியை பாதிக்கிறது

4.பலர் மதுவுக்கு அடிமையாகி அதிக அளவில் மது அருந்துதல் கிட்னியை பாதிக்கிறது

5.பலர் உடல் வலிக்கு வலி நிவாரணி மருந்துகளை அதிக அளவில் எடுத்தால் அது கூட கிட்னியை பாதிக்கும்

6.பலர் அடிக்கடி விரதம் இருந்து பட்டினி கிடப்பதால் கிட்னி பாதிக்கிறது