இந்த வெயில் காலத்தில் எதனால் அடிக்கடி கிர்ணி பழம் சாப்பிட சொல்றாங்க தெரியுமா சார் ?

 
kirni kirni

எல்லோருக்கும் பழக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களும் விரும்பி உண்ணக்கூடிய பழம்தான் முலாம் பழம்.இதை கிர்ணி பழம் என்றும் பெரும்பாலானோர் அழைப்பர். இதில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவற்றை “வைட்டமின்களின் சேமிப்புகலம்” என்றும் அதோடு மட்டுமின்றி அதிக நற்பலன்கள் கொண்டுள்ளதால் இவற்றை “பழங்களில் ஹீரோ” என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இதனை ஜுஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது. 
பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித்திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைவு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் கிர்ணி பழம் உதவுகிறது. “மிகமிகக் குறைவான கிளைசிமிக் இண்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கக் கூடியது.

முலாம் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு :

முலாம் பழத்தில் பல ஊட்டச்சத்துகள் மிக அதிக அளவில் இருப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக இந்தப் பழம் உள்ளது. USDA பிரகாரம், இந்தப் பழத்தில் கார்போஹைட்ரெட், புரதம், மற்றும் தண்ணீர் சத்து மிக அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ . பீட்டா கரோடின், வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2. வைட்டமின் பி 6, வைட்டமின் பி 9, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்றவை முலாம் பழத்தில் உள்ளன. முலாம் பழத்தில் உள்ள கனிமங்கள், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஜின்க் போன்றவை ஆகும் .

 

முலாம் பழத்தில் உள்ள கலோரி அளவு :

100 கிராம் முலாம் பழத்தில் 34 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதனால் எடை இழப்பிற்கான உணவாக இது சிறந்த முறையில் செயல்படுகிறது.

முலாம் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் :

வெயில் காலங்களில் உங்கள் உடலை நீர்ச்சத்தோடு வைக்க உதவும் பழங்களில் முலாம் பழம் முக்கிய இடம் பிடிக்கிறது. அதனால் கோடைக்கு ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது. இந்த பழத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி கீழே காணலாம்.

1. கண்பார்வையை மேம்படுத்துகிறது:

ந்யுட்ரியன்ட் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஆய்வுப்படி, ஆரோக்கியமான முறையில் கண்களைப் பாதுகாக்க முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி, சியாக்சன்தின் மற்றும் கார்டினைடு போன்றவை உதவுகின்றன. கண்புரை நோய், படர்ந்த நசிவு மற்றும் போன்ற பாதிப்புகள் குறையும் வாய்ப்பு உள்ளது.

 

2. ஆஸ்துமாவைத் தடுக்கிறது :

முலாம் பழம் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துகள் ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்க உதவியாக உள்ளன.

 

3. புற்று நோய் எதிர்ப்பு வலிமை கொண்டது :

முலாம் பழத்தில் போலேட் சத்து மிக அதிக அளவு உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு மிதமான அளவு முலாம் பழத்தின் கால் பகுதியில் 25mcg ஆளவு போலேட் சத்து உள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் க்ளினிகல் ந்யுட்ரிஷன்  நடத்திய முதல் கட்ட ஆய்வுப்படி, குறைந்த அளவு புற்று நோய்க்க அறிகுறிகள் இருக்கும் மனிதர்களைப் பாதுகாக்கும் தன்மை போலேட் சத்துக்கு உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் புற்று நோயின் அதிகரித்த அறிகுறிகள் காணப்படும் பிற்கால நிலைகளில் முலாம் பழம் புற்று நோயாக்கத்தை அதிகரிக்கிறது என்பதும் அறிவுறுத்தப்படுகிறது. முலாம் பழத்தின் புற்று நோய் எதிர்ப்புப் பண்புகள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள  அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

முலாம் பழத்தில் வைடமின் சி , வைடமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் போன்றவை இருந்து, தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்துப் போராடுகிறது. பெத்சிடா, மேரிலாண்டில் உள்ள தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, வைட்டமின் சி சத்து , நோய்க்கு காரணமாக இருக்கும் ப்ரீ ரெடிகேல்களைப் போக்குவதாகக் கூறப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலம் உருவாக்க ஒரு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது என்று போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் மருத்துவர். ரோட்ரிகோ மோரா கூறுகிறார். மேலும், இரத்த ஓட்டத்தில் காணப்படும் அபாயகரமான பக்டீரியா, கிருமிகள் மற்றும் இதர நச்சுப் பொருட்கள் மற்றும் வெளிப்புறப் பொருட்கள் போன்றவற்றை அழிக்க உதவும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகிறது.