சிறுநீரக கல் ஏற்பட முக்கிய காரணங்களும் .அதில் சிக்கிவிடாமல் தப்பிக்கும் வழிகளும்

 
kidney

நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தப்படுத்தும் பணியை கிட்னி திறம்பட செய்து வருகிறது .இந்த கிட்னியை காப்பாற்றுவது நம் கடமையாகும் .கிட்னியில் கற்கள் தோன்றுவது அதை சீரழிக்கும் .அதனால் அந்த கிட்னியில் கற்கள் வருவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டு அது  ஏற்படாமல் காக்க வேண்டிய வழிகளை கூறுகிறோம் கேளுங்கள் .

kidney

தேவைக்கும் குரைவாக தண்ணீர்  அருந்துவது உங்களுக்கு சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.அசைவ  உணவுகளை அதிக அளவு உட்கொள்ளுவதாலும் உங்களுக்கு சிறுநீரக கல் ஏற்படுகின்றது .சிறுநீரை வெளியேற்றாமல் நீங்கள் அதிக நேரம் அடக்கி வைத்திருப்பதால் உங்களுக்கு சிறுநீரகத்தில்  கல் உண்டாகின்றது.உங்கள் உடம்பில் வைட்டமின் ஏ  பற்றாக்குறையாக  இருப்பதும் சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
 இடுப்பில் வலி ,வாந்தி ,யூரின் போகும்போது வலி ,யூரினில் ரத்தம் வெளியேறுவதுப் போன்றவை கிட்னியில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும் 

சித்த மருத்துவ தீர்வுகள் 
நெருஞ்சி விதையுடன் ,கொத்தமல்லி விதையை சேர்த்து காய்ச்சி குடிப்பது சிறந்த சிகிச்சையாகும் .
சோம்புடன் வெள்ளரி விதையை சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வரலாம் .எலுமிச்சை யுடன் துளசியை சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம் .அருகம்புல்லுடன் மிளகை சூப் செய்து குடிக்கலாம் .ஓமம் மற்றும் மிளகை சேர்த்து வெல்லம் கலந்து சாப்பிடலாம் .நன்னாரி வேரில் கடுக்காய் சேர்த்து உண்ணலாம்