முற்றிய நோய்களை விரட்டும் கற்றாழை சாறு ..

 
katrazhai

ஆற்றங்கரையோரமும் ,சில இடங்களில் சாலையோரமும் ,தோட்டங்களிலும் சதுப்பு நிலங்களிலும் ,வளர்ந்திருக்கும் கற்றாழை நம் உடலுக்கு நிறைய நன்மைகள் செய்கின்றது .குறிப்பாக கற்றாழை ஜெல் நம் சருமத்திற்கு நிறைந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது .மேலும் அடர்த்தியான கூந்தல் வேண்டுவோர் இதை பயன்படுத்தலாம் .மேலும் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் இந்த ஜெல்லை பூசினால் இந்த பிரச்சினை சரியாகும்

aloevira

மேலும் வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பது உடல் எடையை குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது . மேலும் தைராய்டு பிரச்சனை மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்கவும் ,பல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் கற்றாழை சாறுஉதவும். 

கற்றாழையில் வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள், சபோனின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வைட்டமின்கள் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின் ஆகியவற்றின் களஞ்சியமாகும். இது செரிமானம், தோல் மற்றும் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றுடன், கால்சியம், குரோமியம், செலினியம், மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.இதனால் இது நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மை செய்ய கூடியது