தொடர்ந்து 120 நாள் இந்த இலையை சாப்பிட்டால் உங்க ஆயுளில் பல வருஷம் கூடும் தெரியுமா?

 
health

கறிவேப்பிலையில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் சி (Vitamin-C) போன்ற சத்துகள் உள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ரத்த அழுத்த நோய் போன்றவை வராமல் தடுக்கலாம். இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது

கறிவேப்பிலை பயன்கள் | கருவேப்பிலை நன்மைகள் | Karuveppilai Benefits in  Tamil..!

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

மேலும் செரிமான பிரச்சினைகள் நீங்குவதுடன் முடி நன்கு கருமையாக வளரும்.

இரத்தச்சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரீச்சம்பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்தச்சோகை நீங்கும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு நல்ல கொழுப்பை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினையிலிருந்து பாதுகாக்கிறது.

ஜலதோஷத்திலிருந்து நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை வேளை உட்கொண்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து வெளியேறிவிடும்.

கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்கள் வெளியேறி விடுவதுடன் அதில் உள்ள விற்றமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயற்படவும் தூண்டும்.