மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை சாப்பிடுவோர் உடலில் எந்த பிரச்சினை குணமாகும் தெரியுமா ?

 
karaisalnkani

.

 மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையின்  சிறப்பை கூற வேண்டுமானால் ராஜ ராஜ சோழன் தன் ஆட்சியில் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரைக்கு வரி விதித்தாராம். அத்தகைய சிறப்பு பெற்றது இந்த கீரை.இதை கீரைகளின் ராணி என்று கூட கூறலாம் .அவ்ளோ மருத்துவ குணங்கள் இந்த கீரைக்குள் அடங்கியிருக்கிறது 

 மஞ்சள் கரிசாலைக்கு அத்தனை முக்கியத்துவம் தருவதற்க்கான காரணம் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்  

கரிசலாங்கண்ணி கீரை (Karisalankanni Keerai) வழங்கும் கணக்கற்ற நன்மைகள்

நம் உடலின் மருத்துவர் கல்லீரல் என்பது அனைவருக்கும் தெரியும்.அந்த லிவர் கெட்டு விட்டால் உடலில் பெரும் பாதிப்பு ஏற்படும் .மாற்று கல்லீரல் பொருத்துவதென்பது மிகவும் காஸ்ட்லியான சிகிச்சை ,எனவே அந்த லிவரை பாதுகாப்பது இந்த கீரை 
அந்த கல்லீரலுக்கே மருத்துவர் இந்த கரிசாலைகீரை. மற்ற கீரைகள் குறிப்பிட மருத்துவ குணம் கொண்டவை. இந்த கீரை கல்லீரல், கண் பார்வை, முடி வளர்ச்சி, பல் வியாதி, தோல் பளபளப்பு, அல்சைமர் என்று சொல்லக்கூடிய  மறதி குணப்படுத்துதல், ரத்த சோகை. வயிற்றுப்புண் இத்தனை நோய்க்கும் அருமருந்து.இவ்ளளவு சிறப்புகள் வாய்ந்த இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையை அனைவரும்  வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டு வந்தால் லிவருக்கு நல்லது