நோய்களை கண்டந்துண்டமாக்கும் கண்டங்கத்திரி பத்தி தெரிஞ்சவங்களுக்கு கண்ட மாத்திரை வேணாம்
கண்டங்கத்தரி என்பது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய தரிசு நிலங்களில் வளரும் ஒரு மூலிகைச் செடி ஆகும். இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி ஆகும். காயானது கத்தரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும்.
![]()
கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய், கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்கள் உண்டு.
'கண்ட' எனும் சொல் முள்ளைக் குறிக்கும் (கண்ட = முள்) கண்டங்கத்தரி (முட்கத்தரி).
'கண்டம்' என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்தரி என்று பெயர்
மூலிகைகளில் பங்கு
மூலிகை வகைகளில் கண்டங்கத்தரி ஆனது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தச மூலம் என்பது சித்த மருந்துகளில் புகழ் பெற்றதாகும். பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு இது தயாரிக்கப் படுவதால் தச மூலம் எனப் பெயர் பெற்றது. இப்பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்தரியும் ஒன்றாகும்.
இயற்கை மருத்துவம்
இளம் பிள்ளை வாத நோய் தாக்கிய சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.
ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்களுக்கு கண்டங்கத்தரி, துளசி மற்றும் தூதுவளைத் தளைகளை இருமடங்கு நீருடன் அரை பங்காகும் அளவு சுண்டக் காய்ச்சி உட்கொண்டு வந்தால் குணமாகும்.
இவை பின் விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவம் ஆகும்.
கண்டங்கத்தரி விதையைக் காயவைத்து எரிக்கும்போது வரும் புகையை வாய்க்குள் அடக்கினால் பல் வலி நீங்கும். வாயில் உள்ள கிருமிகள் அழியும். கசப்புத்தன்மை கொண்ட கண்டங்கத்தரிக் காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இருமல், சளி குணமாவதோடு, வயிற்றில் உள்ள கிருமிகளும் நீங்கி நன்கு பசி எடுக்கும். இக்காய்களை வற்றல் செய்தும் சாப்பிடலாம்.
கண்டங்கத்தரிப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இளைப்பு (உடல் இளைத்தல்) நீங்கி உடல் வலிமை அதிகரிக்கும். மேலும், பல் அரணை மற்றும் தோல் நோய்களையும் குணப்படுத்தும். பழத்தைக் காயவைத்துப் பொடித்து தேனில் கலந்து காலை, மாலை என இருவேளை கொடுத்துவரக் குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
கண்டங்கத்தரிப் பழத்தைக் கொதிக்கும் நீரில் குழையவைத்து வடிகட்டிய பின் நான்கு பங்குக்கு ஒரு பங்கு சுரை விதை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி ஆறவிட்டு காதுக்குள் விட காது வலி நீங்கும்.


