ரத்த அழுத்தம் சட்டுன்னு குறைய வைக்கும் இந்த ஜூஸ்
பொதுவாக நாம் தக்காளி சாப்பிட்டால் அதில் உள்ள விட்டமின் ஏ நம் கண் பார்வைக்கு நல்லது .அது மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது .மேலும் இதில் உள்ள விட்டமின் சி நமக்கு இதய பாதிப்பு வராமல் தடுக்கும் ,மேலும் தக்காளி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் உண்டு என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம்
1.தக்காளி ஜூஸ் நம் ஆரோக்கியத்துக்கு நல்லது .எளிதாக தயாரித்து அருந்தக்கூடிய தக்காளி ஜூஸை தினமும் பருகினால் உயர் இரத்த அழுத்த பாதிப்பை குறைக்கலாம்.
2. இந்த தக்காளி ஜூஸ் பற்றி ஜப்பானில் 500 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது.
3.இந்த தக்காளி ஜூஸ்க்காக ஆண்கள், பெண்கள் இருபாலரிலும் வெவ்வேறு வயது கொண்டோர் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனர்.
4.அவர்கள் தினமும் தக்காளி ஜூஸ் அருந்தவும், அருந்தும் ஜூஸின் அளவையும் இரத்த அழுத்தத்தின் அளவையும் குறித்து வைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
5.ஓராண்டு முழுவதும் அந்த ஜப்பானியர்கள் தக்காளி ஜூஸ் அருந்தினர்.
6.இவ்வாறு அருந்தியவர்களில் 94 சதவீதத்தினரில் உயர் இரத்த அழுத்த பாதிப்ப்புக்கு உள்ளானவர்கள் , 7.ஆய்வின் முடிவில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. .
8.தக்காளி ஜூஸ் மூலம் ரத்த அழுத்தம் (சிஸ்டோலிக்) 141.3 ஆக இருந்தவர்களுக்கு 137 mmHg ஆக குறைந்திருந்தது.
9.தக்காளி ஜூஸ் மூலம் ரத்த அழுத்தம் (டயஸ்டாலிக்) 83.3 ஆக இருந்தவர்களுக்கு 80.9 ஆக குறைந்திருந்தது..


