வெயில் காலத்தில் எந்த ஜூஸ் குடிப்பது நல்லது தெரியுமா ?

 
sun

இந்த அக்கினி வெயிலை சமாளிக்க ஜூஸ் குடிப்பது நல்லது .எந்த ஜூஸை குடிக்க வேண்டும் என்பது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.வெயில் காலங்களில் காலையில் பீட்ரூட் ஜூஸ் அருந்துவது உடலுக்கு நல்லது.
2.இது உடலின் வறட்சியை தவிர்த்து உணவுகள் எளிதில் செரிமானமாகும். இதனால் வயிறு லேசாக இருக்கும்.

beetroot juice
3.கொளுத்தும் வெயிலில் வெளியே செல்லும் போது கறுப்பு நிற குடை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 4.வெளிர் நிற குடைகளை பயன்படுத்துவதால் வெப்பம் அதிகம் உள் வராது இருக்கும்.
5.கோடை காலத்தில் நீங்கள் உட்கொள்ளும் உணவில் தினமும் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6.இதனால் உடல் சூடு தணிவதுடன், உணவு எளிதில் செரிமானமாகும். மேலும், சூட்டினால் ஏற்படும் வயிற்றுக் கோளாறு பிரச்சனைகளும் நீங்கும்.
7.அதே போல உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். இது பசியைத் தூண்டும். 8.கோடையில் உப்பு, எண்ணெய், காரம், புளிப்பு சேர்த்த உணவு வகைகளை தவிர்க்கலாம்.
9.அதற்குப் பதிலாக, இனிப்பு, துவர்ப்பு, கசப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பித்தம் சேராமல் தடுக்கும்.