கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும் இந்த ஜூஸ்

 
liver liver

பொதுவாக பழ ஜூஸ்களை போலவே சிலவகை காய்கறி ஜூஸ்களும் நம் உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மை அளிக்க கூடியது .அது போல் பேரீட்சை ஜூசும் நமக்கு நன்மையளிக்கும் 
மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு பிரச்னைகளுக்கு பேரீட்சை ஜூஸ் நிரந்தரத் தீர்வாக அமையும். .பேரீட்சை ஜூஸ்  பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலு அளிக்கும். பேரீட்சை ஜூஸ் மலச்சிக்கலை தீர்க்கும். பேரீட்சை ஜூஸ்  இரும்புச்சத்து நிறைந்தது.
ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் பேரீட்சை ஜூஸ் அருந்தலாம்.மேலும் பல்வேறு ஜூஸ்களில் உள்ள நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் 

1.வயிற்றில் புண்கள் இருப்பவர்களுக்கு, கேரட் ஜூஸ் நல்ல மருந்து. கேரட் ஜூஸ் கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும்.
 2.கேரட் ஜூஸ் சருமத்துக்கான டானிக் இது. கேரட் ஜூஸ்பார்வை குறைபாடுகளை தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ஆற்றல் கொண்டது கேரட் ஜூஸ்
 3.கேரட் ஜூஸ், உடம்புக்கு குளிர்ச்சி தருவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். 
4.கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய கேரட் ஜூஸ் பருகலாம். 
5.சளி தொந்தரவு உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட்ட பின்னரே கேரட் ஜூஸைப் பருக வேண்டும்.
6.கேரட் ஜூஸ் பார்வை குறைபாடுள்ளவர்கள்குடிக்கலாம் .சீரான சருமம் கிடைக்க, முடி வளர்ச்சிக்கு, அல்சர் பிரச்னை இருப்பவர்கள், நெஞ்செரிச்சல் தொல்லை இருப்பவர்கள் கேரட் ஜூஸ் குடித்து வரலாம்.
7.அடுத்து பீட்ரூட் ஜூஸ் பற்றி பார்க்கலாம் .அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். 
8.மேலும் நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட் ராலின் அளவு குறையும்.
9.ரத்தசோகை உள்ளவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்ப வர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவது நல்லது.
10.அடுத்து பேரீச்சை ஜூஸ் பற்றி பார்க்கலாம் .பேரீட்சை ஜூஸைத் தொடர்ந்து குடித்தால், உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.