இந்த ஐந்து ஜூஸை அடிக்கடி குடிச்சா முடி உதிரவே உதிராது

 
hair

பொதுவாக முடி உதிர்வு பிரச்சினை இப்போது பலருக்கும் இருக்கிறது .இதற்கு பின்வரும் இயற்கை வழிகளை பின்பற்றினாலே போதும் .அவை என்னவென்று நாம் பாக்கலாம்

1.முடி உதிரும் பிரச்சனை பெரும்பாலும் அனைவருக்கும் உண்டு.
2.இது ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் வருகிறது. இதற்கு உணவு பழக்கமும் ஒரு காரணமாக இருக்கிறது.

hair fall prevent tips

இதனை நாம் தடுத்து அடர்த்தியான முடியை பெற என்னென்ன ஜூஸ்கள் குடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

3.முதலாவதாக குடிக்க வேண்டிய ஜூஸ் கேரட். இதில் வைட்டமின் ஏ மற்றும் பி ஈ நிறைந்துள்ளதால் இது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
4.இரண்டாவதாக குடிக்க வேண்டியது வெள்ளரிச்சாறு. இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி உச்சந்தலையில் ஈரப்பதத்தை காத்து வறட்சியை நீக்கி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

5.மூன்றாவதாக குடிக்க வேண்டியது கற்றாழை சாறு. இது முடியை வலுவாக வளர உதவுகிறது.
6.மேலும் நான்காவதாக ஆம்லா சாறு. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் தலைமுடி சேதம் அடையாமல் பாதுகாத்து முடி வளர உதவுகிறது.

7.ஐந்தாவதாக குடிக்க வேண்டியது கீரை சாறு
இதில் இரும்பு சத்து மற்றும் பயோட்டின் இருப்பதால் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுத்து தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.