சர்வதேச மகளிர் தினம்: ஆண்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா??

 
சர்வதேச மகளிர் தினம்:  ஆண்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா??


சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்காக கொண்டாப்படும் ஒன்று என்றாலும், அதில் ஆண்களின்  பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாளில் ஆண்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா??

"சர்வதேச மகளிர் தினம்"  ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண், பெண் பாலின  சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவுமே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த நாளை பெண்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஆண்டுகள் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கு..  இப்பவும் ஒரு பெண்ணோட  சுதந்திரத்தை ஆணிடம் இருந்து தான் பெற வேண்டுமா??, மகளிர் தினத்தை பெண்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஆண்கள்  என்ன செய்துவிட முடியும்? என பல கேள்விகள் நமக்குள் எழும்..  ஆனால் இந்தியாவில் 80% பெண்கள் இன்றளவிலும், ஆண்களின்  இறுதி முடிவை எதிர்ப்பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

சர்வதேச மகளிர் தினம்:  ஆண்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா??
விரும்பிய படிப்புகளை படிப்பது,  பிடித்த உடைகளை அணிவது, நினைத்த வேலைகளுக்குச் செல்வது என அனைத்திலும் இந்த  காலத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தாலும், எதிலும் இறுதி முடிவு என்பது ஆண்களிடம் இருப்பதை மறுத்துவிட முடியாது.  மகள் அப்பாவின் முடிவுக்காக, சகோதரி அண்ணனின் முடிவுக்காக, மனைவி கணவரின் முடிவுக்காக, அம்மா மகனின் முடிவிற்காக என பெண்களின் சுதந்திரம் கலாச்சார போர்வையில் ஆண்களிடம் கட்டுண்டு கிடப்பதை இல்லை என்று கூறிவிட இயலாது.  குடும்பங்களின் கட்டமைப்புகளால்  உருவானது நம் கலாச்சாரம். இங்கு சுய சிந்தனை, சுயமான முடிவுகள் எடுப்பது சாத்தியப்படாது. ஆனால் இது ஆணாதிக்கச் சமூகம் என்கிற தடை இன்று தகர்ந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை..  

சர்வதேச மகளிர் தினம்:  ஆண்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா??

இந்த மாற்றமும், மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்த இருபாலினத்தவர்களால் சாத்தியமானது. அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள் என பல பரிமாணங்களில் பெண்களோடோ அல்லது  பெண்களை சார்ந்தோ தான் ஒரு  ஆண் பயணிக்கிறான். ஆக பெண்களின் பலம் , திறமை, தோழமை, பலவீனம் எல்லாம் ஆண்கள் அறிந்த ஒன்றே.. அப்படி உங்களோடு பயணிக்கும் பெண்களை இந்த மகளிர் தின நாளில் பாராட்ட மறந்து விடாதீர்கள்.. உங்கள் அலுவலகத்தில் பெண்கள் இருக்கிறார்களா??.. அவர்களுடன் பாலின சமத்துவத்தை கடைபிடியுங்கள்.. வீட்டுப் பொறுப்புகள், குழந்தைகள் மற்றும் பணி என  கூடுதல் நெருக்கடிகளுக்குள் சிக்கி இருக்கும் பெண்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்பளித்து , அங்கீகரியுங்கள்.. பாலியல் தொந்தரவுகள் இன்றி  பெண்கள் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிசெய்ய, நல்ல பணிச்சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்.

சர்வதேச மகளிர் தினம்:  ஆண்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா??

திருமணம் ஆனவரா நீங்கள்??.. அப்போது உங்கள் பொறுப்பு கொஞ்சம் கூடுதல்..  மனைவிக்கு சுதந்திரம் அளிக்கப் பழகுங்கள்.. சுதந்திரம் என்று சொன்னது எப்போதும் அவர்கள் நிதி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதைத்தான்.. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அவர்கள் யாரையும் எதிர்ப்பார்காமல் இருப்பது தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையை  அதிகப்படுத்தும். உங்கள் மனைவிக்கு சுய தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தால், அதனை ஆதரித்து சமமான பிரதிநிதித்துவம் அளித்து, பொருளாதார உதவிகள் செய்து ஊக்கப்படுத்துங்கள்.. பின்னாளில் அவர் சிறந்த தொழில் முனைவோராகவும் ஆகலாம்..  

சர்வதேச மகளிர் தினம்:  ஆண்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா??

இதன் மற்றொரு பக்கமாக, உங்கள் மனைவி பணிக்குச் செல்ல விரும்பினால் ஆதரவு அளித்து ஊக்கப்படுத்துங்கள்.. பணிச்சுமை தெரியாமல் இருக்க வீட்டில் வேலைகளை பகிர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்.. இது உங்கள் உறவை பலப்படுத்துவதுடன், பொருளாதார ரீதியாக குடும்பமே முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.. அதேபோல் ஒரு தந்தையாக மகளுக்கும், சகோதரனாக சகோதரிக்கும்  பாலின சமத்துவத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொடுங்கள்.. சுதந்திரம் என்பது கொடுப்பதில் இல்லை, நாம் நடப்பதில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..

இந்த சர்வதேச மகளிர் தினத்தில் பெண் சமூகத்தை அங்கீகரியுங்கள்..  உங்கள் வாழ்வில் அவர்கள் ( பெண்கள்)  எவ்வளவு முக்கியத்துவமானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக, அவர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்.  அவர்களுக்கு பிடித்தமான பொருட்கள்,  பெண் சாதனையாளர்களின் புத்தகங்களை பரிசளித்து, ஊக்கப்படுத்துங்கள்.  ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால்  ஒரு பெண் இருப்பாள் என்பது போன்று,  ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் ஒரு ஆண் இருப்பான் ( நீங்கள் இருப்பீர்கள் ) என்பதை உணர்த்துங்கள்..  சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்..