கொரோனா காலத்தில் தனிமையை போக்கி கொள்ள வரப்பிரசாதமாகிய ஜூம் மீட்டிங்!

 

கொரோனா காலத்தில் தனிமையை போக்கி கொள்ள வரப்பிரசாதமாகிய ஜூம் மீட்டிங்!

மனிதன் ஒரு சமுக விலங்கு. அவனால் சமூகத்தோடு ஒன்றிணையாமல் இருக்க முடியாது. அவனுக்கு உரையாடிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மனித உயிர்களைக் குடிக்கும் இந்தக் கொரோனா காலம் ஏராளமானோருக்கு தனிமையைப் பரிசளித்திருக்கிறது. தனிமையில் இருப்பதால் கொரோனாவை விட கொடிய மனநிலைப் பிரச்சினைகளும் வந்து சேருகின்றன. கொரோனா காலக்கட்டத்தில் அதிகப்படியானோருக்கு மனநல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கொரோனா காலத்தில் தனிமையை போக்கி கொள்ள வரப்பிரசாதமாகிய ஜூம் மீட்டிங்!

அதே சமயம் தனிமையைப் போக்கிக் கொள்ள தொழில்நுட்பம் வரப்பிரசாதமாகவும் மாறியிருக்கிறது. மக்கள் தனிமையை எதிர்த்துப் போராட செல்போன்கள் மூலம் பிற மக்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அன்புக்குரியவர்கள் அருகில் இருப்பது போல உணர முடியாவிட்டாலும் நிஜத்திற்கு நெருக்கமாக இருக்கும் வகையில் போன்களில் இருக்கும் வீடியோ கால் வசதி உதவுகிறது. வீடியோ கால் வசதியை அளிக்கும் மிக முக்கிய செயலியாக ஜூம் (zoom) இருக்கிறது. ஜூம் செயலி மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இயைந்து விட்டது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு கொரோனா காலத்தில் அதன் வீச்சு எங்கும் பரவியிருக்கிறது.

கொரோனா காலத்தில் தனிமையை போக்கி கொள்ள வரப்பிரசாதமாகிய ஜூம் மீட்டிங்!

அந்நிறுவனம் சமீபத்தில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. சுமார் 8 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் 1,007 பேர் இந்தியர்கள். இணைய வழியாக நடந்த இந்த ஆய்வானது கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற 92 சதவீதத்தினர் ஜூம் வீடியோ கால் பேசுவதால் மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர். 75 சதவீதத்தினர் தங்களது மன ஆரோக்கியம் சீராக இருக்க ஜூம் கால் உதவியிருப்பதாகக் கூறியுள்ளனர்.

கொரோனா காலத்தில் தனிமையை போக்கி கொள்ள வரப்பிரசாதமாகிய ஜூம் மீட்டிங்!

மேலும் 72 சதவீதத்தினர் கல்வி சம்பந்தமாக ஜூம் செயலியைப் பயன்படுத்துவதாகவும், 62 சதவீதத்தினர் கொண்டாட்டங்களுக்கும் உறவினர்கள் ஒன்றுகூடும் விழாக்களுக்கும் உபயோகிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் ஜூம் செயலில் இந்தியாவில் சிறந்த வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 58 சதவீதம் பேர் பொழுதுபோக்குக்காகவும், 50 சதவீதம் வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் என்று ஜூம் ஆய்வு கூறுகிறது. தொற்றுநோய்களின்போது மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு 42 சதவிகிதத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.