எங்க தாத்தாவுக்கு, இப்ப நல்லா பசியெடுக்க காரணம் இந்த இலந்தை பழ சூரணம் -தயாரிக்கும் முறை
இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும்.
![]()
இலந்தை பழத்தின் நன்மைகள்
1. எலும்புகள் வலுப்பெற உதவுகின்றது. உடலில் கால்சியம் குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இலந்தைப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும், பற்களும் உறுதிபெறும்.
2. இலந்தைப் பழத்தினால் பித்தத்தினால் ஏற்படும் மயக்கமானது தெளிவாகிறது. உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
3. உடல் வலியைப் போக்க உதவுகின்றது. சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
4. செரிமான சக்தியைத் தூண்டச் செய்கிறது. சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
5. உடல் உஷ்ணத்தைத் தடுக்கின்றது. இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்பதால் இலந்தைப் பழங்களைச் சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்கிறது.
6. ஞாபக சக்தியை ஊக்குவிக்கும். இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் நன்மை பயக்கும்.
7. பெண்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் இரத்த போக்கு அதிகம் ஏற்படாமல் தடுக்கும். பெண்கள் பலருக்கு மாதவிடாய்க் காலங்களில் இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படையச் செய்வதைத் தடுக்கின்றது.
8. தூக்கமின்மைப் பிரச்சனையைச் சீர்செய்கின்றது. நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். இலந்தை பழம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருப்பதால் தூக்கமின்மை குறைபாட்டை நீக்கும்.


