மூட்டு வலி வராமலிருக்க என்ன செய்யவேண்டும் என்ன செய்ய கூடாது தெரியுமா ?

 
moottu pain tips from aththi milk

1.உடல் ரீதியான உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை போன்ற செயற்பாடுகளினால் மூட்டு வலியானது ஏற்படுகின்றது.
2.அதாவது கணிணியில் வேலைகளை மேற்கொள்பவர்கள் பெருவாரியாக இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 
3.ஏனெனில் இவர்கள் நீண்ட நேரம் ஒரே அமர்வில் இருந்து கொண்டு வேலையினை மேற்கொள்கின்றனர்.
4.இன்றைய காலகட்டத்தில் காணப்படும் துரித உணவு பழக்கவழக்கத்தினாலும் மூட்டு வலியானது ஏற்படுகின்றது. 
5.அதாவது அதிகப்படியான போசாக்கின்மையான உணவுகளை உட்கொள்வதனால் இந்த வகையான நோய் ஏற்படுகின்றது.
6.அதிகப்படியான உடற்பருமனுடன்  காணப்படுபவர்களுக்கு தசை இறுகப்பெற்று மூட்டு வலியானது வருகின்றது.
7.இந்த மூட்டு வலியானது முதுமை, கிருமித்தொற்று, காசநோய் போன்ற காரணங்களினாலும் இது ஏற்படுகின்றது. 
8.மேலும் அதிகமாக ஓரே இடத்தில் அமர்ந்திருப்பதன் மூலமும் மூட்டு வலி ஏற்படும்.
9.அதிகப்படியான உடல் எடையால்  மூட்டு வலி ஏற்படும் எனவே உடல் எடையை குறைப்பதன் ஊடாக இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.
10.உடற்பயிற்சி செய்வதன் ஊடாக மூட்டு வலியிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ள முடியும். .
11.உணவு பழக்கவழக்கத்தில் ஆரோக்கிமான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல் வேண்டும். 
12 மூட்டு வலி இல்லாது ஒழிக்க கிழங்கு வகைகளை சாப்பிடக் கூடாது.