சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை செய்வது எப்படி ?
May 4, 2021, 18:43 IST1620134014000
அசைவ பிரியர்களுக்கு மட்டன் கோலா உருண்டை என்றால் ஒரு தனி பிரியம் !! அதே சுவையில் சைவ பிரியர்களுக்கு மீல் மேக்கரை வைத்து சுவையான கோலா உருண்டை செய்வது எப்படி என்று இப்பொழது பார்ப்போம்…
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் : 200 கிராம்
பொட்டுக்கடலை : 2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் : 4 மல்லித்தழை : சிறிதளவு கருவேப்பிலை : சிறிதளவு கார்ன் பிளவுர் மாவு : 2 டீஸ்பூன் உப்பு , எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :பச்சைமிளகாய் : 3, இஞ்சி : ஒரு துண்டு, பூண்டு : 5 பல், பட்டை : 1 துண்டு, லவங்கம் : 2, முந்திரிப்பருப்பு : 4, சோம்பு : அரை டீஸ்பூன்
செய்முறை
- மீல் மேக்கரை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு , இறக்கி வடிகட்டி மீண்டும் இருமுறை பச்சை தண்ணீரில் போட்டு நன்கு அலசிப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள் .
- பொட்டுக்கடலையை பொடி செய்யுங்கள் .
- வெங்காயம் , ஒரு பச்சை மிளகாய் , கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்குங்கள்
- மீதி 2 பச்சை மிளகாயுடன் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைஸாக , கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள் .
- மீல் மேக்கர் துண்டுகளை மிக்சியில் போட்டு , அடித்து உதிர்த்துக்கொள்ளுங்கள் .
- இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து காயும் எண்ணெய்யில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வேகவிட்டு எடுங்கள் .
இப்போது சூடான வாய்க்கு ருசியான மீல் மேக்கர் கோலா உருண்டை ரெடி !!!