குடல் இறக்கம் குணமாக சித்த மருத்துவ வழிகள் ...!

 
belly

குடலிறக்கத்திற்கு பாட்டி வைத்தியம் என்ன...

உடற்பயிற்சியின்மையும் ,சில நேரங்களில் அதிக எடை தூக்குவோரும் ,மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டவருக்கும் குடலிறக்கம் என்ற ஹெர்னியா தோன்ற வாய்ப்புள்ளது.

stomach

குடலிறக்கம் குணமாக என்ன செய்ய வேண்டும்

குடலிறக்கம் குணமாக நம் வீட்டு சமையலறையில் என்றும் இருக்கக்கூடிய ஒரு சிறந்த மருத்துவப் பொருள் இஞ்சி.இது  குடலிறக்கம் பிரச்சனையால் அவதிப்படுவோரின் வேதனையை சரிசெய்ய இது பயன்படுத்தப்படுகிறது. இது குடலிறக்கம் மூலம் ஏற்பட்ட வலியை குறைக்கும், எனவே குடலிறக்கம் பிரச்சினையுள்ள  நபர்கள் தினமும் காலை,மாலை ,இரவு என்று பலமுறை இஞ்சி டீ குடித்து வந்தால் இதில் சிறந்த நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது .

அடுத்து குடலிறக்கத்துக்கு உதவும் மிளகு வைத்தியம் : மிளகு பல்வேறு விதமான வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் குடலிறக்கம்  போன்ற நோய்களை குணப்படுத்தும்ஆற்றல்  கொண்டது. நீங்கள் மிளகினை பாலிலோ அல்லது நீங்கள் உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்வதன், மூலம் குடலிறக்கம் நோயை  வென்று காமிக்கலாம்

அதி மதுரத்துக்குள் ஆயிரம் நன்மைகள் அடங்கியுள்ளது .சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களை இந்த அதி மதுரம் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது .அது போல் குடல் இறக்கத்தை சரிசெய்ய அதிமதுரம் ஒரு சிறந்த நாட்டுமருந்து. இதனை நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும் இந்த அதி மதுர  பொடியை பாலில் கலந்து வாரம் இரண்டு முறை  குடித்துவந்தால் குடலிறக்கம் நம்மை விட்டு ஓடி விடும்