அடிக்கடி குழந்தையை டாக்டரிடம் கூட்டி போய், டார்ச்சராகாமல் காக்கும் இந்த மூலிகைகள்.

தேவையானவை
வசம்பு – 1
சித்தரத்தை – 1
சுக்கு – 1
ஜாதிக்காய் – 1
மாசிக்காய் – 1
கடுக்காய் – 1
செய்முறை
உரை மருந்தை உரசி எடுக்க உதவும் உரைக்கல்லை வாங்கி கொள்ளுங்கள்.
இந்த உரைக்கல்லை, குழந்தைக்கு மருந்து தயாரிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.
இந்த கல்லை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
மண்ணால் தயாரித்த அகல் விளக்கில், விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுங்கள்.
இந்த நெருப்பில் மேற்சொன்ன 6 மூலிகைகளையும் நெருப்பில் காட்டி சுட வையுங்கள்.
சுட வைத்த பின், உரைக்கல்லில் உரசலாம்.
ஒரு மாத குழந்தைக்கு என்றால், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என ஒரு முறை உரசி தேய்த்தாலே போதும். 6 மூலிகைகளையும் ஒரு முறை உரசி தேய்க்கலாம்.
இரண்டு மாத குழந்தைக்கு என்றால், இரு முறை மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என தேய்க்கலாம்
இப்படி குழந்தையின் மாதத்துக்கு ஏற்றது போல மூலிகையை எத்தனை முறை வேண்டும் என தேய்க்கலாம்
மேற்சொன்ன 6 மூலிகைகளையும் இப்படிதான் உரசி மருந்து தயாரிக்க வேண்டும்.
1. வசம்பு
இதைப் பிள்ளை வளர்ப்பான் என்றே சொல்வார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
பசியின்மை போக்கும்.
சுறுசுறுப்பைத் தரும்.
வயிறு தொடர்பான பிரச்னைகளை நீக்கும்.
மலச்சிக்கலைத் தீர்க்கும்.
வாயு தொல்லைகளை நீக்கும்.
சளி, இருமல் கூட சரியாகும்.
பால் செரிக்காமல் வெளுத்த நிறத்தில் மலம் போவதைத் தடுக்கும்.
வயிறு உப்புசம் நீங்கும்.
உடல் வளர்ச்சிக்கு உதவும்.
2. சித்தரத்தை
நெஞ்சு சளியை நீக்கும்.
தொண்டை, மார்பில் கட்டி உள்ள சளியை நீக்கும்.
குழந்தைக்கு சளி பிடிக்காமல் பாதுகாக்கும்.
3. சுக்கு
வாந்தி, வயிறு வலி பிரச்னை நீக்கும்.
வயிற்றில் வாயு சேராமல் தடுக்கும்.
வயிற்று வலியால் குழந்தை தவிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
அஜீரண பிரச்னை இருக்காது.
4. ஜாதிக்காய்
குழந்தைகள் தூங்க உதவும்.
பசி சீராக எடுக்க உதவும்.
குழந்தை சிடுசிடுவென்று அடிக்கடி அழுவதைத் தடுக்கும்.
அடிக்கடி குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.
5. கடுக்காய்
நல்ல செரிமான சக்தியைத் தரும்.
வயிற்றில் கெட்ட காற்று உருவாகுவதைத் தடுக்கும்.
குடல், இரைப்பை, கல்லீரல் ஆகியவற்றை சரியாக இயங்க செய்யும்.
மலமிலக்கியாக செயல்படும்.
6. மாசிக்காய்
சிறுநீர் சீராக வெளியாக உதவும்.
பசியைத் தூண்டும்
வாய்ப் புண், குடல் புண் வராமல் தடுக்கும்.
செரிமான கோளாறு நீக்கும்.
வாரம் இருமுறை மருந்தை குழந்தைக்கு தரலாம்.
குழந்தைக்கு தலைக்கு ஊற்றிய நாட்களில், இந்த மருந்தை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.


