வெட்டிவேர் எண்ணை தட்டி தூக்கும் நோய்கள் பட்டியல்

 
health

பொதுவாக நறுமண சிகிச்சையில் வெட்டிவேர் மிகவும் பிரபலமான ஒரு பொருள். இந்த வெட்டி வேர் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .இந்த பதிவில் அதன் மருத்துவ பயன்களை இப்பொது பார்க்கலாம்.

1.வெட்டி வேரின்  மென்மை மற்றும் குளிர்ச்சியான தன்மை, உடலின் வீக்கத்தை குறைக்கிறது.

vetti ver

2.மேலும் ஆரோக்கியமான வெட்டி வேர் நரம்பு மண்டலம் மற்றும் சுழற்சி மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3.வெட்டி வேர் பக்கவாதம், வயிற்றுப்போக்கு போன்றவற்றால் ஏற்படும் அழற்சிக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை பொருளாகும்.

4.வெட்டிவேரில் இருக்கும் சிக்காட்ரிஷன்ட் என்னும் பொருள்   உடலில் வடுக்கள் மறைவதை துரிதப்படுத்துகிறது.

5.மேலும் வடுக்கள் ஏற்பட்ட இடத்தில்  புதிய திசுக்கள் வளர்ந்து இறந்த திசுக்களை மாற்றி அமைகிறது. .

6.பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு  வயிற்றில் ஏற்படும் வரி தழும்புகள் , கொழுப்பு பிளவுகள் , அம்மைக்கு பிறகு ஏற்படும் தழும்புகள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு மருந்தாக வெட்டி வேர் பயன்படுகிறது.

7. . வெட்டி வேரின் எண்ணையை காயங்களில் தடவுவதன் மூலம் பாக்டீரியா மற்றும் நுண் கிருமிகளை செயலிழக்க செய்கின்றன.

8. வெட்டி வேர்  எண்ணெய் வெளியுறுப்புகள் மற்றும் உள்ளுறுப்புகள் இரண்டிலும் காயங்களை குணமாக்குகின்றன.

9.. வெட்டிவேர் டானிக்  . செரிமானம்சுவாசம்,நோயெதிர்ப்பு,நரம்பு, நாளமில்லா சுரப்பி, போன்ற எல்லா உறுப்புகளையும் சரிபடுத்துகிறது.

10. இந்த வெட்டி வேர் டானிக் உடலை சீர்படுத்தி, புத்துணர்ச்சி அடைய செய்கிறது.

11.இந்த வெட்டி வேர் டானிக் உடலுக்கு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கிறது.