எந்தெந்த உணவுப்பழக்கத்தால் உங்க இதயம் நூறு வருஷம் துடிக்கும் தெரியுமா ?

 
heart pain

நம் இதயத்துக்கு முதல் எதிரி கெட்ட கொழுப்புகள்தான் .இந்த கெட்ட கொழுப்புள்ள சில வகை உணவுகளை தவிர்த்தால் ,இதய நோயால் தவிக்க வேண்டி வராது .அதனால் பின் வரும் உணவுப்பழக்கத்தை பின்பற்றி உங்கள் எதிர்காலம் இதய நோயில்லாத வசந்த காலமாக இருக்கட்டும் 

heart health

உடலில் அதிகப்படியாக இருக்ககூடிய கெட்ட கொழுப்பினை

10 சதவீதம் வரை குறைத்தால் அவை 20 சதவீத இதய நோய்

பிரச்சனைகளிலிருந்து உங்களைக் காக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.இந்த   கொழுப்பைக்

கரைக்க மாத்திரைகளை சாப்பிட தேவையில்லை உங்களுடைய உணவுப்பழக்கம்

மற்றும் வாழ்க்கை முறையில் சிலவகை மாற்றங்களை செய்தாலே போதுமானது .இதை மாற்றம் என்று நினைக்காமல் இதுதான் இனி என்னுடைய உணவுமுறை என்று முடிவு செய்து கொண்டாலே போதுமானது

கொழுப்பு :

.

கொழுப்பு உணவுகளில் இருக்கக்கூடிய சாச்சுரேட்டட் ஃபேட் தான் இதயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

வெண்ணைய், எண்ணெய், க்ரீம், கறி போன்ற உணவுகளில் இந்த கொழுப்பு அதிகமிருக்கும். அதனால் எண்ணெயில் பொறித்த ,கொழுப்பு அதிகமுள்ள ,உயிருக்கும் இதயத்துக்கும் தீங்கு ஏற்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லப்படுகிறது.

மைதா மற்றும் மாவுப் பொருட்கள் நிறைந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள்,

ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக காய்கறி மற்றும் பழங்களை

அதிகம் சாப்பிடுங்கள். இவற்றில் அதிகப்படியான ஃபைபர் இருக்கும்

என்பதால் அவை உங்கள் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை

கரைக்க பெரிதும் உதவிடும்.மாவுச் சத்து நிரம்பிய உணவுப்பொருட்களை அதிகம் எடுத்து கொள்ளாமல் இருந்தாலே இதயத்தில் கெட்ட கொழுப்பு சேராமல் உங்கள் இதயம் நூறு ஆண்டுகள் துடிக்கும் .