இதயம் ஆரோக்கியமாய் இருக்க பாதாமை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 
heart

பொதுவாக  பாதாம் தினம் ஐந்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏரளமான நன்மைகள் உண்டு ,இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.பாதாமை  அப்படியே சாப்பிடாமல் முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் தோலுரித்து குழந்தைகளுக்கு கொடுத்தால் ஏராளமான நன்மையுண்டு .
2.தோலுடன் இதை சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும் ,அதனால்தான் தோலுரித்து கொடுக்க சொல்கின்றனர் மருத்துவர்கள் .
3.பாதாம் வளரும் குழந்தைகளின்  மூளைக்கு நல்லது. இதில் உள்ள  மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்  மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்து ,எப்போதும் ஆக்டிவாக இருக்க செய்கின்றன .  

padham
4.இதய நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதய நோய் குணமாகும் மற்றும் இதய நோய் வராமல் தடுத்து ,உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும் .
5.கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் இதை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி நம் ஆரோக்கியத்தினை பாதுகாக்கிறது
6.அடிக்கடி சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் .இப்படி  உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் அந்த மலச்சிக்கல் குணமாகி ,எளிதாக மலம் போகும்
7.பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோயை வராமல் நம்மை பாதுகாக்கிறது