"எதை தின்றால் இதய நோய் வராது" ன்னு யோசிக்கிறவங்களுக்கு உதவும் இந்த குப்பையில் வீசும் தோல்

 
omion

நத்தை, ஆமை போன்றவை தன்னை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மேற்புற ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும். அது போல இயற்கையாக கிடைக்கக் கூடிய காய்கறி பழங்களுக்கு இருக்கும் மேல் புற தோல்களுக்கு அதிக சத்துக்கள் உண்டு. அந்த வகையில் வெங்காயம் தோலை வைத்து என்ன செய்யலாம்? 
. நாம் அனுதினமும் சமைக்கும் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம் ஆகும். அதிகமாக பயன்படுத்தும் வெங்காயத்தின் உடைய தோல் பகுதியை பெரும்பாலும் தேவையில்லை என்று தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. வெங்காய தோலில் அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் anti-inflammatory காணப்படுகின்றன அதே போல் விட்டமின் A, C, E ஆகியவையும் நிறைந்துள்ளன. எனவே இவற்றிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய வேறு வகை பயன்பாடுகள் தெரிந்தால் கண்டிப்பாக தோலை தூக்கி எறிய மாட்டோம். நீங்கள் தோலுரித்த பின் தனியாக ஒரு பாலித்தீன் பையில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்

வைட்டமின் ஏ நிறைந்த வெங்காயத்தோல் தேநீர் கண்களுக்கு நல்லது. இது சருமத்தின் அமைப்பையும் மென்மையையும் மேம்படுத்துகிறது. இதற்கு நீரை சுட வைக்கும்போது, அதனுடன் வெங்காயத்தோல், சர்க்கரை, டீத்தூள் சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும், ஆனால் இது உங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

வெங்காயத்தோலின் பிற நன்மைகள் இதோ:

- வெங்காயத்தோலில்  வைட்டமின் சி நிறைந்துள்ளதால், பல வகையான நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

- வெங்காயத்தோலை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சூடாக குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இதய பிரச்சனை நீங்கும்.

- வெங்காயத் தோல்களில் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

- ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வெங்காயத்தோல் டீ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு வேகவைத்து, அதன் பின் வடிகட்டி குடிக்கலாம். இதை தினமும் உட்கொள்ளலாம்.

- இது தவிர, தலைமுடியைக் கழுவுவதற்கு முன், வெங்காயத் தோலை தண்ணீரில் போடவும். ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசினால், முடி கொட்டும் பிரச்சனையும் தீரும்.

- வெங்காயத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

- வெங்காயத் தோல்களில் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்செடின் மற்றும் பினோலிக் ஆகியவை உடலில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.