இப்படி தூங்குறவங்களை எதிர்காலத்தில் வாட்டியெடுக்கும் நோய்கள்
பொதுவாக ஒரு சிலர் அதிகம் குளிரும் என்பதால், ஒரு இடைவெளி கூட இல்லாமல் முழுவதுமாக போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவர் .இப்படி தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
இப்படி போர்வையால் வாய் மற்றும் மூக்கை மூடினால், பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.அது பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1.குளிர்காலத்திலோ அல்லது ஏசி அறையிலோ முழு உடலையும் போர்வையால் மூடுவது ஆக்ஸிஜனின் ஓட்டத்தைத் தடுக்கிறது.
2.இப்படி போர்த்திக்கொண்டு தூங்குவது இருதய பாதிப்புகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை உருவாக்கும்
3.இப்படி போர்த்திக்கொண்டு தூங்குவதால் மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் சுவாசிப்பது கடினமாகிவிடும். இதனால் இரவில் சரியாக தூங்க முடியாது .
4.இப்படி போர்த்திக்கொண்டு தூங்குவதால் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
5. இப்படி போர்த்திக்கொண்டு தூங்குவதால் தலைவலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
6.இப்படி போர்த்திக்கொண்டு தூங்குவதால் தூக்கமின்மைஉருவாகி மனநலம் முற்றிலும் பாதிக்கப்பட அதிக அளவு வாய்ப்புள்ளது.
7.இப்படி போர்த்திக்கொண்டு தூங்குவதால் நம்முடைய உடலுக்கு ஆக்ஸிஜன் வரவு குறைந்து , வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும்.
8.இதனால் உங்கள் உடலில் கொழுப்பு வேகமாக சேர்ந்து ஆரோக்கியம் பாதிக்கும் .
9.இப்படி போர்த்திக்கொண்டு தூங்குவதால் உடல் எடை அதிகரித்து, சில நாட்களில் உடல் பருமனாகிவிடும்.
10.இப்படி போர்த்திக்கொண்டு தூங்குவதால் மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளும் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.


