காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதால் எவ்ளோ நன்மை தெரியுமா ?

 
tips of rice water tips of rice water

பொதுவாக வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது  சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாகும். இப்படி குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது இரத்தத்தைச் சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

2.சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்களுக்கு வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்துவது மிகவும் நல்லது.

honey

3.இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

4.காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது.