தண்ணீரில் பேக்கிங் சோடா கலந்து குடிப்பது எந்த நோய்க்கான சிகிச்சை தெரியுமா ?
பொதுவாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தால் வடிகட்ட முடியாமல் போகும் நிலை உருவாகும், இதனால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.இந்த இந்த யூரிக் அமிலத்தை குறைக்க பல்வேறு இயற்கை முறை சிகிச்சைகள் உள்ளன அது பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.அதிக யூரிக் அமிலமானது சிலருக்கு கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது, இதனால் மூட்டுகளில் வீக்கம் அல்லது வலி ,மலசிக்கல் ,அதிக சோர்வு போன்றவை ஏற்படலாம்.
2.மேலும் யூரிக் அமிலம் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்தும்,
3.யூரிக் அமிலம் அதிகரித்தால் முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்
4.இந்த யூரிக் அமிலத்தை குறைக்க தினமும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து அருந்தலாம்.
5.இந்த யூரிக் அமிலத்தை குறைக்க வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்கள் யூரிக் அமில பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும்,
6.இந்த யூரிக் அமிலத்தை குறைக்க அதிகளவு தண்ணீர் குடிப்பதும். சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதும் நல்லது.
7.இந்த யூரிக் அமிலத்தை குறைக்க ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து குடிக்கலாம்.
8.இந்த யூரிக் அமிலத்தை குறைக்க ஓமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளையும், சிட்ரஸ் அதிகம் நிறைந்த பழங்களையும் கண்டிப்பான முறையில் தவிர்க்க வேண்டும்
9.இந்த யூரிக் அமிலத்தை குறைக்க ஓமத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .இதை சேர்த்து கொள்வதால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும், குறிப்பாக செரிமானம் மேம்பட்டு வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
10.இந்த யூரிக் அமில பிரச்சனைக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணி., அதனால் குறைந்தது 7 முதல் 8 மணிநேர உறக்கம் இந்த யூரிக் அமில நோய்கள் அண்டவிடாமல் பாதுகாக்கும்.