இந்த காயும் பழமும் இருந்தால் எந்த நோயும் உங்க வீட்டு பக்கம் வராது

 
health tips of koyya

பொதுவாக நம் உணவில் அதிகம் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்து கொண்டால் பல நோய்கள் நம்மை அண்டாது .மாத்திரை மருந்துக்கு செலவு செய்வதை நிறுத்திவிட்டு பழங்களுக்கு செலவு செய்தால் மிக நலம் சேர்க்கும் .அதனால் எந்த காயில் என்ன நன்மை எவ்வளவு விட்டமின் உள்ளது என்று ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளோம் அதை படித்து பலன் பெறுங்கள்

1. 1 கப்  சிவப்பு மிளகாயில் 191 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. ஆனால் பச்சை மிளகாயில் 64.8 மி.கி வைட்டமின் சி உள்ளதால் சிவப்பு மிளகாய் அதிகம் சேர்க்கலாம் .

2.அடுத்து காய் வகையில் காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி மற்றும் சில கீரைகளிள் 81.2 மி.கி வைட்டமின் சி உள்ளது.இவற்றை அதிகம் உணவில் சேர்க்கலாம்

prokkoli

3.அடுத்து சிலர் உருளை கிழங்கை வாயு என்று ஒதுக்குவர் ,ஆனால்  ஒரு  உருளைக்கிழங்கில் 17.7 மி.கி வைட்டமின் சி உள்ளது

4.சிலர் கொய்யாவை விரும்பி சாப்பிடுவது உண்டு . ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் 125 மில்லிகிராம் வைட்டமின் சி கிடைக்கிறது.

5. ஒரு சிலர் ஸ்ட்ராபெரி விரும்பி சாப்பிடுவர் .ஒரு கப்  ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டால், உடலுக்கு 97.6 மில்லிகிராம் வைட்டமின் சி கிடைக்கும்.

6.அதே போல் பப்பாளியில் விட்டமின் அதிகம் உள்ளது .ஒரு கப்  பப்பாளி சாப்பிட்டால், உடலுக்கு 88.3 மில்லிகிராம் வைட்டமின் சி கிடைக்கும்.

7.. அதே போல ஆரஞ்சு பழத்திலும் நற்குணம் உண்டு .ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் 82.7 மில்லிகிராம் வைட்டமின் சி கிடைக்கிறது.

8.. அடுத்து கிவியிலும் மருத்துவ குணம் உண்டு ஒரு கிவி சாப்பிடுவதால், 64 மில்லிகிராம் வைட்டமின் சி கிடைக்கும்.

9. ஒரு எலுமிச்சையில் 34.4 மில்லிகிராம் வைட்டமின் சி காணப்படுகிறது.

10.இந்த பழங்களை தினம்தோறும் சாப்பிட்டுவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று நோய்கள் எப்போதும் வராது.