அடிக்கடி சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் எந்த பார்ட்டுக்கு நல்லது தெரியுமா ?

 
sarkkarai valli

பொதுவாக சர்க்கரை வள்ளி கிழங்கு நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .இந்த கிழங்கை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடலாம் .ஆனால் எண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் சிலருக்கு சுகர் அளவு கூட வாய்ப்புள்ளது .மேலும் இந்த கிழங்கு மூலம் நாம அடையும் பலன்களை பார்க்கலாம்

1.பொதுவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள மூல பொருட்கள் நம் உடலில்  ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

2.சர்க்கரை வள்ளிக்கிழங்கை நீங்கள் வேகவைத்துச் சாப்பிடும் பொழுது அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருப்பதால் சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும்

3.. சிலருக்கு உடலில் கெட்ட கொழுப்பு இருக்கும் .அதனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பை குறைக்கும் என ஆய்வுகள் சொல்கிறது.

4.இதனால் இந்த  சர்க்கரைவள்ளிக் கிழங்கு உங்களுடைய இதய பிரச்சினைகளை குறைக்கும்.

5.மேலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் காணப்படுகிறது.

6. அதனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து கண்களில் ஏற்படக்கூடிய நோய்களை குறைக்கிறது.

7.மேலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

8.இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு  கொழுப்பு செல்கள் வளராமல் இருக்க உதவுகிறது. இதனால் இது உங்களுடைய உடல் எடையை குறைக்க உதவுகிறது.

9.சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. இதை நீங்கள் வறுத்து, பொரித்து சாப்பிடும் பொழுது இது கிளைசீமிக் அளவை உயர்த்தி உங்களுடைய இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.

10.டைப் 2 நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் சர்க்கரைவள்ளி கிழங்கை பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .